தடை செய்யப்பட்ட போதை பொருட்களை ரகசியமாக விற்ற நபர்… மடக்கி பிடித்த போலீசார்..!
திருப்பூரில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஹான்ஸ் குட்கா பொருட்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்த நபர் கைது. 123 கிலோ ஹான்ஸ் மற்றும் குட்கா பொருட்கள் பறிமுதல்.
திருப்பூரில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஹான்ஸ்,குட்கா, போதை பொருட்கள் விற்பனை செய்பவர்களை கண்டறிந்து திருப்பூர் மாநகர காவல் துறையினர் கடும் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் திருப்பூர் மாநகர காவல் ஆணையர்.லட்சுமி உத்தரவின் பேரில் காவல்துறையினர் தீவிர தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் உதவி ஆணையர் அணில் குமார் தலைமையிலான காவல்துறையினர் புதிய பேருந்து நிலையம் அருகில் NRK புறம் பகுதியில் ஆய்வு மேற்கொண்டதில் அங்கு ஒரு வீட்டில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட போதைப் பொருட்களான ஹான்ஸ் புகையிலை குட்கா போன்ற பொருட்கள் இருப்பதைக் கண்டுபிடித்தனர்.
அதனைத் தொடர்ந்து ஹான்ஸ் குட்கா புகையிலைப் பொருட்களை பதுக்கி வைத்து கடைகளுக்கு சப்ளை செய்து வந்த சிவன் என்பவரை கைது செய்து அவரிடமிருந்த 123 கிலோ எடை கொண்ட ஹான்ஸ் குட்கா புகையிலை போதை பொருட்களை பறிமுதல் செய்தனர்.
மேலும் தமிழக அரசால் கைது செய்யப்பட்டுள்ள குட்கா,ஹான்ஸ் பொருட்களை விற்பனை செய்பவர்களை கண்டறிந்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தனர்.
-பவானி கார்த்திக்