கருவளைங்கள் போக்க ஒரு மேஜிக்..!
முகத்தை அழகாக வைக்க பல குறிப்புகள் பின் பற்றி வருகிறோம், ஒரு சில குறிப்புகள் ஒரு சில சருமத்தினருக்கு ஏற்றதாக இருக்காது. இந்த குறிப்பு அனைத்து சருமத்தினருக்கு ஏற்றது.
ஈர சருமம் :
நெய்யில் வைட்டமின் ஏ, மற்றும் கொழுப்பு அமிலங்கள் அதிகம் இருப்பதால் சிறந்த மாய்ஸ்சரைசர் செய்யப் பயன்படுகிறது. இதை முகத்தில் பயன் படுத்தும் பொழுது சருமம் நீண்ட நேரம் வறண்டு போகாமல் இருக்கச் செய்கிறது.
இதில் ஸ்குவாலின் என்ற இயற்கை ஆக்சிஜனேற்றம் இருப்பதால் சருமத்தை ஃப்ரீ ரேடிக்கல் மற்றும் ஆக்சிஜனேற்ற சேதத்தில் இருந்து சருமத்தை பாதுகாக்க உதவுகிறது.
சரும வெடிப்பு :
தினமும் நெய்யை உதட்டின் மேல் தடவி விட்டு ஒரு நிமிடம் கழித்து காட்டன் துணியால் துடைத்து விட்டால் சரும வெடிப்பு மறைந்து விடும்.
கண் கருமை நீங்க :
கண் கருமை நீங்க, கண் கருமை உள்ள இடத்தை சுற்றி நெய்யை தடவினால் கருமை நீங்குவதோடு சருமம் மிக பிரகாசமாக இருக்கும். கருமை திட்டு ஏற்படாமலும் பார்த்துக்கொள்ளும்.
நச்சுக்கள் நீக்கம் :
நெய்யில் இருக்கும் வைட்டமின்கள், ஆக்சிஜனேற்றிகள் மற்றும் செரிமான அமைப்பை ஆதரிக்கும் கொழுப்பு அமிலங்கள் நிறைந்து இருப்பதால்.., சருமத்தில் உள்ள அனைத்து நச்சுக்களையும் வெளியேற்றி சருமத்தை பளபளப்பாக வைக்கும்.
மேலும் இதுபோன்ற பல அழகு குறிப்புகள் பற்றி தெரிந்துக்கொள்ள தொடர்ந்து படித்திடுங்கள்
Discussion about this post