காதலர்கள் இடையே பிரச்சணையால் சோகத்தில் முடிந்த வாழ்க்கை..!
புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள நெம்ம கோட்டை பகுதியை சேர்ந்தவர் அருள் வினித் (28) . இவர் அரசு உதவி பெறும் பள்ளியில் விடுதி காப்பாளராக பணியாற்றி வருகிறார்.
இவர் அதே பகுதியை சேர்ந்த தனியார் பள்ளியின் ஆசிரியரான புவனேஸ்வரி (23) என்ற இளம் பெண்ணை காதலித்து வந்துள்ளார். இந்தநிலையில் கடந்த சில நாட்களாகவே இருக்கும் இடையே பிரச்சனை இருப்பதால் இருவரும் பேசாமல் இருந்துள்ளனர்.
இதனைதொடர்ந்து, நேற்று முன்தினம் காதலனின் செல்போனுக்கு தொடர்பு கொண்ட புவனேஸ்வரி நீ என்னிடம் பேசவில்லை என்றால் தற்கொலை செய்து கொள்வேன் என்று கூறிவிட்டு இணைப்பை துண்டித்துள்ளார்.
இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த அருள் வினோத் தனது காதலியின் வீட்டிற்கு விரந்து சென்றார். ஆனால் அவர் செல்வதற்குள் புவனேஸ்வரி தற்கொலை செய்து கொண்ட நிலையில் இறந்து கிடந்தார்.
காதலி இறந்ததை கண்டு மனமுடைந்த அருள் வினித் அப்பகுதியில் உள்ள தோட்டத்திற்கு சென்று அங்கிருந்த பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதனை கண்ட அவரை அக்கம் பக்கத்தினர் உடனே அவரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
அங்கு அவருக்கு திவீர சிகிச்சை கொடுக்கப்பட்டதை தொடர்ந்து இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தகவறிந்த போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஒரு சின்ன பிரச்சனைக்காக பேசாமல் இருந்த காதலர்கள் இருவரும் ஒரே நாளில் அடுத்தடுத்து உயிரை மாய்த்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-பவானி கார்த்திக்
தொடர்கதை -2 – Written – 500
“தோல்வியை கண்டு அஞ்சாதே வெற்றியை கண்டு கர்வம் கொள்ளாதே”