மயிலாடுதுறையில் தொடரும் காத்திருப்பு போராட்டம்..!! இதற்கு தீர்வு தான் என்ன..?
மயிலாடுதுறை அருகே உள்ள தலைஞாயிறு என் பி கே ஆர் ஆர் கூட்டு சர்க்கரை ஆலையை திறக்க கோரியும் தொழிலாளர்களின் ஊதிய நிலுவைத் தொகை ஓய்வூதியர்கள் மற்றும் வாரிசுதாரர்கள் பண பலன்களை வழங்க கோரியும் அனைத்து தொழில் சங்க கூட்டமைப்பு சார்பில் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு இரண்டாவது நாளாக தொடரும் தொடர் காத்திருப்பு போராட்டம்:-
மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு அருகே உள்ள தலைஞாயிறு என் பி கே ஆர் ஆர் கூட்டு சர்க்கரை ஆலையை திறக்க கோரியும் தொழிலாளர்களின் ஊதிய நிலுவைத் தொகை ஓய்வூதியர்கள் மற்றும் வாரிசுதாரர்கள் பண பலன்களை வழங்க கோரியும் அனைத்து தொழில் சங்க கூட்டமைப்பு சார்பில் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தொடர் காத்திருப்பு போராட்டத்தை நேற்று தொடங்கினர்.
சி ஐ டி யு செயலாளர் ஜெயபால் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் சிஐடியு தலைவர் கல்யாணசுந்தரம், துணைத் தலைவர் தமிழரசன் மற்றும் கரும்பு விவசாயிகள் சங்கத்தினர் தமிழ்நாடு விவசாய சங்கங்கள் தினார் உள்ளிட்ட ஏராளமான கலந்து கொண்டனர். அதனைத் தொடர்ந்து,
* 30 மாத ஊதிய நிலுவைத்தொகை அனைவருக்கும் உடனடியாக வழங்கிட வேண்டும்,
* இறந்து போன தொழிலாளர்களுக்கு குடும்ப நல பாதுகாப்பு நிதியுடம் ஊதிய நிலுவைத் தொகை மற்றும் ஓய்வூதிய பலனை உடனே வழங்கிட வேண்டும்,
* ஓய்வு பெற்ற அனைத்து தொழிலாளர்களுக்கும் ஊதிய நிலுவைத் தொகையையும் ஓய்வூதிய பலன்கள் உடனடியாக வழங்கிட வேண்டும்,
* அனைத்து தொழிலாளர்களுக்கும் ஈட்டிய விடுப்பு உடனே வழங்கிட வேண்டும்,
* மதுரை அலங்காநல்லூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை, ஆம்பூர் கூட்டுறவு சக்கரை தொழிலாளர்களின் ஊதிய நிலுவைத் தொகையினை உடனே வழங்கிட வேண்டும்
என ஐந்து அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று இரவு முழுவதும் அதிரவு போராட்டத்தில் ஈடுபட்ட சங்கத்தினர் மீண்டும் இன்று காலை இரண்டாம் நாள் போராட்டத்தில் தொடர்கின்றனர்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..