அரியலூர் மக்களுக்கு ஒரு குட் நியுஸ்..! 96 இலட்சம் மதிப்பீட்டில் உங்களுக்காக..?
அரியலூர் மாவட்டத்தில் ஒரு கோடியே 96 இலட்சம் மதிப்பீட்டில் 8 புதிய வளர்ச்சித் திட்டப்பணிகளை போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் துவக்கிவைத்தார்.
அரியலூர் மாவட்டம், செந்துறை ஒன்றியத்தில் ஊரகவளர்ச்சி துறையின் சார்பில் ஒரு கோடியே 96 லட்சம் மதிப்பீட்டில் 8 புதிய வளர்ச்சி திட்டப்பணிகளை போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் துவக்கி வைத்தார்.
இதன் தொடர்ச்சியாக செந்துறை ஒன்றியம், இருங்கலாக் குறிச்சி கிராமத்தில் முதலமைச்சரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் இருங்கலா குறிச்சி முதல் ஆனைவாரி ஓடை வரை சாலை அமைக்கும் பணியினையும்,
பின்னர் புதுப்பாளையம் கிராமத்தில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் ஆதன குறிச்சி புதுப்பாளையம் கிழக்குத் தெருவில் கழிவுநீர் வாய்க்கால் 210 மீ அமைக்கும் பணியினையும், தொடர்ந்து அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ஆதனக்குறிச்சி புதுப்பாளையம் சிமெண்ட் சாலை அமைக்கும் பணியினையும், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ஆதன குறிச்சி புதுப்பாளையம் ஆதிதிராவிடர் காலனியில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணியினையும் துவக்கிவைத்து பணிகளை தரமான பொருட்களை கொண்டு விரைவில் முடித்திட சம்மந்தப் பட்ட அலுலர்களுக்கு அறிவுறுத்தினார்.
பின்னர் முள்ளுக் குறிச்சி கிராமத்தில் நபார்டு கிராமப்புற உள்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் இரண்டு வகுப்பறைகளுடன் கூடிய பள்ளிக்கட்டடம் கட்டும் பணியினையும் துவக்கி வைத்தனர்,
பள்ளி மாணவர்களிடம் முதலமைச்சர் செயல் படுத்தப்பட்டுள்ள முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் குறித்து எடுத்துரைத்ததுடன் அரசின் திட்டங்களை முறையாக பயன் படுத்திக் கொண்டு படித்து வாழ்கையில் முன்னேறுவதுடன், பெற்றோர்களுக்கும், அரியலூர் மாவட்டத்திற்கும் பெருமை சேர்க்க வேண்டும் போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் ஊராட்சி மன்றத்தலைவர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..