தமிழகத்தை வெளுத்து வாங்க காத்திருக்கும் கனமழை..!! மீனவர்களுக்கு விடப்பட்ட எச்சரிக்கை..!!
தமிழகத்தில் வருகின்ற ஆகஸ்ட் 30ம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை, புறநகர் பகுதிகளில் இன்று வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் என தெரிவித்துள்ளது..
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெப்ப அலை வீசி வரும் நிலையில் தற்போது மேற்கு திசை காற்றில் வேக மாறுபாடு நிலவுவதால். இன்று முதல் இன்னும் 5 நாட்களுக்கு அதாவது (ஆகஸ்ட் 30ம் தேதி ) வரை மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது..
அதே சமயம் காஞ்சிபுரம், திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம், பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், மற்றும் நாகை மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை முதல் லேசானது மழை பெய்யக் கூடும் எனவும் சென்னையின் புறநகர் பகுதிகளில் இன்று வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் எனவும்., ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.
மன்னார் வளைகுடா, தென் தமிழக கடலோரப் பகுதிகளில் இன்றும், நாளையும் மணிக்கு 35 முதல் 55 கி.மீ வேகத்தில் சூறாவளிக் காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கு விடுத்துள்ளது..
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..