விபரீதத்தில் முடிந்த விளையாட்டு..!! பரிதாபமாக உயிரிழந்த 5 சிறுவர்கள்…!!
ஏரியில் மூழ்கி மூன்று சிறுமிகள் உட்பட நான்கு குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது..
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த அடையபுலம் கிராமத்தில் அண்ணா நகர் அருகே உள்ள ஓடைத்தாங்கல் பகுதியை சேர்ந்தவர் குப்புசாமி அஞ்சலி தம்பதியினர். இவர்கள் இருவரும் விவசாயக் கூலி வேலை செய்து வருகின்றனர். இவர்களது மகன் மோகன் ராஜ் அதே பகுதியில் அரசு பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்துள்ளான்..
இரண்டாவது மகள் வர்ஷா நான்காம் வகுப்பு படித்து வந்துள்ளார்., அதே கிராமத்தைச் சேர்ந்த விநாயகம் செல்வி தம்பதியினரின் மகள்கள் கார்த்திகா (வயது 9), தனிஷ்கா (வயது 7) ஆகிய இரு சிறுமிகளுடன் இணைந்து, நேற்று மாலை வீட்டின் அருகேயுள்ள ஓடைத்தாங்கல் ஏரியில் குளிக்க சென்றுள்ளனர். குளிக்கச் சென்ற சிறுமிகள் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால், ஏரிக்கு பெற்ற பிள்ளைகளை தேடி அவர்களது பெற்றோர் மற்றும் உறவினர்கள் சென்றுள்ளனர்..
அங்கு அவர்களை காணாததால்., குளத்தில் சிறுவர்கள் மிதந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர்களது பெற்றோர் கிராம மக்கள் உதவியோடு சிறுவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு சென்றுள்ளனர்.. அங்கு அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுவர்கள் இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்..
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த வந்த ஆரணி காவல் நிலைய போலீசார் இறந்த சிறுவர்களின் உடல்களை உடற்கூர்வு ஆய்விற்காக ஆரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.. இந்த சம்பவம் குறித்து காவலர்கள் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
விளையாட்டு போக்கில் ஏரியில் குளிக்க வந்த ஒரு சிறுவன் உட்பட மூன்று சிறுமிகள் நீரில் மூழ்கி பலியான சம்பவம் கிராம மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..