தியாகராய நகர் பகுதியில் துணி குடோனில் தீ விபத்து ஏற்ப்பட்டதால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது
சென்னை தியாகராய நகரில் அமைந்துள்ள பிரபல போதீஸ் ஜவுளி கடை சேகரமிப்பு குடவுணில் விடிய காலை 5.30 மணிக்கு மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது, இந்த தீ விபத்தினால் குடவுனில் சேகரித்து வைக்கப்பட்ட அதிகபட்ச துணிகள் நாசம் ஆகின.
மேலும் இதன் மதிப்பு சுமார் ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் சேதம் ஏற்பட்டுள்ளதாக தீயணைப்புத் துறையினர் தகவல் அளித்துள்ளனர்.
பின்னர் தகவல் கிடைத்த சிறிது நேரத்தில் தியாகராய நகர் தீயணைப்பு துறையினர் மூன்றுக்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்களை கொண்டு அதிவேகமாக சுமார் 1/2 மணி நேரத்தில் போராடி தீயை அணைத்தனர். விசாரித்ததில் மின் கசிவினால் ஏற்பட்ட தீ விபத்து என போலீசார் தரப்பில் கூறப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது