பாஜக இடத்தை குறைத்த பிரபல நிறுவனம்..! திடீர் டிவிஸ்ட்..! அதிர்ச்சியில் பாஜக..!
2024 லோக்சபா தேர்தலில் பாஜகவிற்கு மெஜாரிட்டி வரும் என்று பெரும்பாலான கணிப்புகள் வெளியான நிலையில். அதில் பல கோளாறுகள் ஏற்பட்டிருப்பதாக சில தகவல்கள் வெளியாகியுள்ளது.
பீகார் குழப்பம் :
உதாரணமாக பாஜக கூட்டணியில் உள்ள லோக் ஜன சக்தி கட்சி, பீகாரில் அங்கே 5 இடங்களில் போட்டியிட்டுள்ளது.
ஆனால் இந்தியா டுடே ஆக்சிஸ் மை இந்தியா கணிப்பில் லோக் ஜன சக்தி கட்சிக்கு 6 இடங்களில் வெற்றி பெற வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளது.
அதாவது கேள்வி என்னவென்றால் 5 இடங்களில் போட்டியிட்டு 6 இடங்களில் எப்படி வெற்றி பெற வாய்ப்பு கிடைக்கும்.
காங்கிரஸ் தமிழ்நாடு குழப்பம்:
தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சி 9 இடங்களில் போட்டியிடுகிறது. ஆனால் ஆஜ் தாக் கணிப்பில் காங்கிரஸ் கட்சிக்கு 13-15 இடங்களில் வெற்றி என்று கொடுக்கப்பட்டு உள்ளது.
அது எப்படி என்ற குழப்பம் உள்ளது. கடந்த 2 தேர்தல்காக தமிழ்நாட்டில் லோக்சபா தேர்தலில் இவ்வளவு இடங்களில் காங்கிரஸ் போட்டியிடாத போது எப்படி இந்த நம்பர் வந்தது..?
மகாராஷ்டிரா குழப்பம் :
இந்தியா டுடே, ஆக்சிஸ் மை இந்தியா எக்ஸிட் போல் கணிப்பில் சிவசேனா ஏக்நாத் ஷிண்டேவிற்கு 8-10 இடங்களையும், சிவசேனா உத்தவ் தாக்கரேவுக்கு 9-11 இடங்களையும் கொடுத்துள்ளது.
இதில் காமெடியான விஷயம் சிவசேனா ஏக்நாத் ஷிண்டே கட்சி 15 இடங்களில் போட்டியிடுகிறது. இதில் 13 இடங்களில் அந்த கட்சி சிவசேனா உத்தவ் தாக்கரேவுக்கு போட்டியிடுகிறது.
அப்படி இருக்க இரண்டு கட்சியும் இத்தனை இடங்களை வெல்ல வாய்ப்பே இல்லை. லாஜிக் படி பார்த்தால் ஒன்று அதிகம் வென்றால் இன்னொன்று குறைவாக வெல்ல வேண்டும்.
இரண்டும் அதிக இடங்களில் நேருக்கு நேர் மோதும் போதும் இரண்டும் எப்படி அதிக இடங்களில் வெல்ல முடியும்.
குழப்பம் மேல் குழப்பம் :
இந்த நிலையில்தான் 2024 லோக்சபா தேர்தலில் பாஜக பெறப்போகும் இடங்களை குறைத்து எக்சிட் போலில் மாற்றங்களை செய்து செய்தி நிறுவனம் ஒன்று வெளியிட்டதை மூத்த பத்திரிகையாளர் பிரசாந்த் பூஷன் விமர்சனம் செய்துள்ளார்.
2024 லோக்சபா தேர்தல் தொடர்பாக பிரபல செய்தி சேனல் வெளியிட்ட கணிப்பில் பாஜக என்டிஏ கூட்டணியில் 353-367 இடங்களிலும்.
இந்தியா கூட்டணி 118- 133 இடங்ளிலும் வெல்லும் என ஒரு கருத்து கணிப்பு வெளியானது.
அதேசமயம் பிற கட்சிகள் 43- 68 இடங்களை வெல்லும் என கருத்து கணிப்புகளை வெளியிட்டது..
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..