பிரபல நடிகை முன்வைத்த பாலியல் புகார்.. சிக்கிய பிரபல நடிகர்..?
ஹேமா கமிட்டியின் அறிக்கைக்கு பிறகு, பாலியல் அத்துமீறல்களை சந்தித்த பல்வேறு நடிகைகள், அதனை சமூக வலைதளங்களில் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், நடிகை ஒருவர், தனது சமூக வலைதளப் பக்கத்தில், பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார்.
அந்த பதிவில், நடிகரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எம்.எல்.ஏ-வுமான முகேஷ் உள்ளிட்ட 4 பேர் தனக்கு, பாலியல் தொல்லை கொடுத்துள்ளதாக கூறியுள்ளார். 2013-ஆம் ஆண்டு நடந்த படப்பிடிப்பின்போது, அவர்கள் தன்னிடம் அத்துமீறி நடந்துக் கொண்டதாகவும், அந்த நடிகை தெரிவித்துள்ளார்.
இவரது இந்த புகாரை ஏற்றுக் கொண்ட காவல்துறையினர், முகேஷ் உள்ளிட்ட 4 பேர் மீதும் வழக்கு பதிவு செய்துள்ளனர். ஆனால், நடிகை வைத்த குற்றச்சாட்டை, முகேஷ் திட்டவட்டமாக மறுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-பவானி கார்த்திக்