மாற்றுத்திறனாளி இளைஞர் நீரில் மூழ்கி உயிரிழப்பு…!!
பெரியகுளம் அருகே கிணற்றில் தவறி விழுந்த மாற்றுத்திறனாளி இளைஞர் நீரில் மூழ்கி பலி. நான்கு மணி நேரம் தீயணைப்புத் துறையினர் தேடி உடலை மீட்டனர்.
தேனி மாவட்டம் பெரியகுளம் கீழவடகரை பகுதியில் ராம்சுந்தர் என்பவரது தென்னந்தோப்பில் உள்ள கிணற்றில் பெரியகுளம் வடகரை பகுதியைச் சேர்ந்த சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் குளிப்பது வழக்கம்.
இந்த நிலையில் பெரியகுளம் வைத்தியநாதபுரத்தைச் சேர்ந்த முருகன் சுப்புலட்சுமி தம்பதியரின் மகனான ராஜ்குமார்(23) என்ற மாற்றுத்திறனாளி இளைஞர் கிணற்று அருகே சென்ற போது தவறி விழுந்து நீரில் மூழ்கியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து அவரது தாய் சுப்புலட்சுமி பெரியகுளம் தீயணைப்புத்துறையினருக்கு கொடுத்த தகவலின் அடிப்படையில் பிற்பகல் 3 மணி முதல் கிணற்றில் தவறி விழுந்த மாற்றுத் திறனாளி இளைஞரை தீயணைப்புத் துறையினர் தேடி வந்தனர்.நான்கு மணி நேரமாக தேடிய நிலையில் இன்று இரவு 7 மணி அளவில் மாற்றுத்திறனாளி ராஜ்குமார் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.
ராஜ்குமாரின் உடல் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக பெரியகுளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மாற்றுத்திறனாளி இளைஞர் கிணற்றில் தவறி விழுந்து பலியான சம்பவம் குறித்து பெரியகுளம் வடகரை காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..