குடியிருப்புக்குள் புகுந்த மழை நீர்…!! பரிதவிக்கும் திருப்பத்தூர் மக்கள்…!!
திருப்பத்தூரில் தொடர் மழை காரணமாக மழை நீர் உடன் கழிவுநீர் கலந்து குடியிருப்புக்குள் புகுந்ததால் பொதுமக்கள் பாதிப்பு நடவடிக்கை எடுக்க கோரிக்கை..
திருப்பத்தூர் மாவட்டத்தில் ஃபெஞ்சல் புயலின் தாக்கத்தால் மாவட்டத்தில் பரவலாக விட்டுவிட்டு கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்து வருகிறது.இதனால் தாழ்வான பகுதிகளில் மழை நீர் சூழ்ந்துள்ளது.இந்நிலையில் புதுப்பேட்டை சாலை காந்திநகர் 4 வது தெருவில் 20க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளது. தற்பொழுது பெய்து வரும் தொடர் மழையால் மழைநீருடன் பாதாள சாக்கடை கழிவுநீர் கலந்து வீட்டுக்குள் புகுந்துள்ளதால் குடியிருப்பு வாசிகள் மிகுந்த சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.
மேலும் இதுகுறித்து பலமுறை இது தொடர்ந்து நகராட்சியில் குடியிருப்பு வாசிகள் புகார் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம் சாட்டுகின்றனர். மேலும் முறையான கழிவுநீர் கால்வாய் வசதி இல்லாததால் இது போன்ற பாதிப்புகள் உள்ளதாக அப்பகுதி சேர்ந்த ஏகாம்பரம் என்பவர் தெரிவித்துள்ளார்.
மேலும் இதனால் நோய் தொற்று பரவக்கூடிய நிலையும் உள்ளதாகவும் குடியிருப்பு வாசிகள் வெளியில் செல்ல வேண்டிய நிலை உருவாகியுள்ளதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்உடனடியாக மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்..