ஹாஸ்டலில் தற்கொலை செய்து கொண்ட கல்லூரி மாணவன்..!
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் சந்தோஷ். இவர் கோவையில் உள்ள பாரதியார் பல்கலைக்கழகத்தில் உடற்கல்வி இளங்கலை பட்டப்படிப்பு 2ம் ஆண்டு பயின்று வரும் இவர் அந்த பல்கலைகழக விடுதியில் தங்கி வந்தார்.
இவருடன் அந்த துறையை சார்ந்த 6 மாணவர்களும் ஒரே அறையில் தங்கியுள்ளனர். கடந்த சில நாட்களாக மனமுடைந்து சோர்வுடன் காணப்பட்ட சுபாஷ், நேற்று சக மாணவர்கள் கல்லூரிக்கு சென்ற நிலையில் தனியாக அறையில் இருந்தார்.
வகுப்புகள் முடிந்து மாலை மாணவர்கள் விடுதிக்கு திரும்பி வந்து பார்த்தபோது விடுதி அறையில், சந்தோஷ் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவர்கள் உடனடியாக பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வடவள்ளி போலீசார்ர் சந்தோஷின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்த போலீசார் சந்தோஷ் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பதை குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
-பவானி கார்த்திக்