குழந்தையின் மனது இலகு – குட்டி ஸ்டோரி -28
சிறுவர்கள் அனைவரும் பள்ளிக்கூடம் முடிந்த பிறகு ஆலமரத்தின் நிழலில் விளையாடிக் கொண்டடிருந்தனர் அப்போது ஒரு பூனைக்குட்டி ஓன்று பசியால் கத்திக்கொண்டு இருந்தது. அதை கண்ட குழந்தைகள், அந்த பூனை குட்டி என்ன செய்கிறது..? என்று பார்க்க சென்றார்கள்.
அது அம்மா இல்லாமல், பசியால் மயங்கி கத்துவதை பார்த்த சிறுவர்கள், அய்யோ பாவம் இந்த பூனை இதுக்கு சாப்பாடு எப்படி எடுத்துட்டு வந்து கொடுக்கிறது..? என்று தெரியாமல் நின்றனர்.
அந்த வழியாக சைக்களில் வந்த தாத்தாவை பார்த்த சிறுவர்கள் அவரிடம் சென்று பூனை குட்டியின் பசியை போக்குவதற்கு உதவிசெய்விர்களா என கேட்டுள்ளனர்.
அந்த தாத்தாவும் சரிங்க குழந்தைகளா இந்த பூனைக்குட்டியே நான் என் வீட்டுக்கு கொண்டு செல்கிறேன் நீங்கள் அனைவரும் பத்திரமாக விட்டிருக்கு புறப்படுங்கள் என சொல்ல, குழந்தைகளும் வீட்டிற்கு சென்றனர்.
ஆனால் அன்பு என்ற சிறுவன் மட்டும் அந்த பூனைக்குட்டி என்ன செய்கிறதோ என நினைத்து கொண்டு ராத்திரி முழுவதும் தூங்காமல் இருந்தான் மறுநாள் விடிந்ததும் பள்ளிக்கூடம் போகாமல் பூனைக்குட்டியே பார்பதற்காக, அந்த தாத்தாவின் விட்டிருக்கு சென்றுள்ளான்.
அது நன்றாக சாப்பிட்டுவிட்டு உறங்கிக்கொண்டு இருப்பதை கண்டு மிகவும் சந்தோஷத்தில் பள்ளிக்கூடம் புறப்பட்டான்.
குழந்தை மனம் என்பது கள்ளம் கபடம் இல்லாத ஓன்று மற்றவர்களின் பசியை பார்த்து தானும் வருத்தம் கொல்வது தான் குழந்தைகள்..
-சரஸ்வதி
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..