மிரளவைக்க இருக்கும் வேட்டையன் ஆடியோ லாஞ்ச்..!
ரஜினிகாந்த், அமிதாப் பச்சன், பகத் ஃபாசில், ராணா டகுபதி, மஞ்சு வாரியர், துஷாரா விஜயன் மற்றும் ரித்திகா சிங் ஆகியோர் இணைந்து நடித்துள்ள வேட்டையன் படமானது இயக்குநர் த.செ. ஞானவேல் அவர்களின் இயக்கத்தில் அக்டோபர் மாதம் 10 ஆம் தேதி திரைக்கு வரும் என தகவல் வெளியாகி உள்ளது.
ஆயுத பூஜை விடுமுறையை சூப்பராக குறிவைத்து இறங்கவுள்ள ரஜினிகாந்த் அவர்களால் நடிகர் சூர்யா அவர்கள் தனது கங்குவா படத்தின் ரிலீஸை தள்ளிவைத்து அமைதியாக இருக்கிறார்.
விடாமுயற்சி மற்றும் வேட்டையன் படத்தை தயாரிக்கும் லைகா நிறுவனமானது முழு கவனத்தையும் தற்போது வேட்டையன் படத்தில் செலுத்தி வருகிறது. பின்பு தான் விடாமுயற்சி பற்றிய தகவல்கள் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ரஜினிகாந்த் நடித்து வெளியான ஜெயிலர் திரைப்படமானது துபாயில் நேற்று நடைபெற்ற சைமா 2024 விழாவில் 5 விருதுகளை வென்று இருக்கிறது இதற்கு காரணம் அவர் சொன்ன காக்கா கழுகு கதை தான் என சொல்லப்படுகிறது.
இதற்கிடையில் ஜெயிலர் படத்தின் இசைவெளியீட்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் சொன்ன காக்கா கழுகு கதையில், காக்கா என்பது நடிகர் விஜய் தான் என சர்ச்சைகள் கிளம்பியது. அடுத்ததாக லியோ படத்தின் வெற்றி விழாவில் நடிகர் விஜய் அவர்கள் காக்கா கழுகு என பேசும் அளவிற்கு சர்ச்சைகள் பெரிதானது.
இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில் பல நட்சத்திரங்கள் நடித்து வெளியாக உள்ள வேட்டையன் படத்தின் இசை வெளியீட்டு விழாவானது சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் செப்டம்பர் மாதம் 20 ஆம் தேதி மாலை 6 மணிக்கு மிக பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. இந்த இசை வெளியீட்டு விழாவில் அமிதாப் பஜ்ஜன், பகத் ஃபாசில், ராணா டகுபதி, மஞ்சு வாரியர் ஆகியோர் பங்கேற்க உள்ளதாகவும், அனிரூத் அவர்கள் மீண்டும் அரங்கத்தை மிரளவைக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதற்கிடையில் நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் என்ன குட்டி ஸ்டோரி சொல்லபோகிறார் என ரசிகர்களின் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.