சூர்யா உடல்நிலை குறித்து பதிவு.. ”கவலை வேண்டாம் ரசிகர்களே”.. தயாரிப்பாளர் ராஜசேகர் பாண்டியன்…!
ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்திற்கு பிறகு, நடிகர் சூர்யாவை வைத்து புதிய படம் ஒன்றை இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கி வருகிறார்.
தற்காலிகமாக சூர்யா 44 என்று அழைக்கப்படும் இந்த படத்தில், பூஜா ஹெக்டே, நாசர் உள்ளிட்ட பல்வேறு நடிகர்கள், முக்கிய வேடத்தில் நடித்து வருகின்றனர். இந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு, ஊட்டியில் நடைபெற்று வந்தது.
ஆக்ஷன் காட்சிகள் உதகையில் எடுக்கப்பட்டபோது, நடிகர் சூர்யாவுக்கு தலையில் காயம் ஏற்பட்டதாக, செய்திகள் வெளியாகி, ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இந்தநிலையில், 2டி எண்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் நிறுவன தயாரிப்பாளர் ராஜசேகர் பாண்டியன், பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில், ”சூர்யாவுக்கு ஏற்பட்டது சிறிய காயம் தான் என்றும், கவலை வேண்டாம் உங்களது அன்பாலும், பிரார்த்தனையாலும், சூர்யா நலமாக உள்ளார்” என்றும், கூறப்பட்டுள்ளது. இதனை பார்த்த ரசிகர்கள், தற்போது நிம்மதி அடைந்துள்ளனர்.
-பவானி கார்த்திக்