வறுமையை முற்றிலும் ஒழிக்கும் பட்ஜெட்..! பிரதமர் மோடி பெருமிதம்..!
இந்தியாவை உலக அளவிலான உற்பத்தி மையமாக மாற்றும் அம்சங்கள் பட்ஜெட்டில் இருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.
2024-25 நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உரையாற்றினார். இந்நிலையில், இது குறித்து பிரதமர் நரேந்திர மோடி கருத்து தெரிவித்துள்ளார்.
அப்போது பேசிய அவர் மக்களவையில் மக்களுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். ஏழைகளுக்கும், இளைஞர்களுக்கும் பெரும் பலத்தை பட்ஜெட் அளிக்கும். நாட்டின் அனைத்து தரப்பு மக்களின் வளர்ச்சிக்கும், அவர்கள் அதிகாரம் பெறவும் பட்ஜெட் வழிவகுக்கும்.அனைத்து துறைகளிலும் பெண்களின் பங்களிப்பை ஊக்குவிக்கும் வகையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.
இந்தியாவை உலக அளவிலான உற்பத்தி மையமாக மாற்றும் அம்சங்கள் பட்ஜெட்டில் உள்ளதாக தெரிவித்த பிரதமர் பட்ஜெட்டில் கல்வி மற்றும் திறன் மேம்பாட்டிற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்
வேலைவாய்ப்பை அதிகரிக்கும் திட்டங்களுக்கு முக்கியத்துவம் தரப்பட்டுள்ளதாக தெரிவித்த பிரதமர் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு கடன் உத்தரவாத திட்டங்கள், மானியங்கள் மற்றும் ஊக்கத் தொகை அதிகரிக்க பட்டுள்ளதாகவும் ஒவ்வொருவரையும் புதிய தொழில் முனைவோராக மாற்றும் வகையில் பட்ஜெட்டில் சிறப்பம்சங்கள் உள்ளதாகவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் வறுமையை முற்றிலும் ஒழிப்பதற்கு, மத்திய பட்ஜெட் பாதை அமைத்து கொடுத்துள்ளதாகவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
– லோகேஸ்வரி.வெ
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..