வாணியம்பாடி அருகே அகர்பத்தி தயாரிக்கும் தொழிற்சாலை மிஷினில் சிக்கி சிறுவன் உயிரிழப்பு
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த மேட்டுப்பாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் அகர்பத்தி மற்றும் கோரைப்பாய் தயாரிக்கும் தனியார் தொழிற்சாலையில் இன்று பணிக்கு வந்த மோகன் என்கின்ற சிறுவன் பத்தாம் வகுப்பு முடித்த பிறகு தேர்ச்சி பெறவில்லை என்பதால் வேலைக்கு சென்றுள்ளான். அப்பொழுது எதிர்பாராத சூழ்நிலையில் பாய் தயாரிக்கும் மிஷினில் தவறாக சிக்கிக் கொண்டு விபத்து ஏற்பட்டது . பின் அவரை பொதுமக்கள் மீட்டு வாணியம்பாடி அரசு மருத்துவமனை கொண்டு சென்றனர். அப்பொழுது சிறுவன் உயிர் இழந்ததாக கூறப்பட்டது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பும் மற்றும் சோகம் ஏற்பட்டது.
பின்னர் இது குறித்து வாணியம்பாடி கிராம காவல் நிலையம் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்ட வருகிறது இதனால் அரசு மருத்துவமனை வளாகத்தில் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் கூடி பெரும் பரபரப்பை வருகிறது பணிபுரிந்து வந்த காமராஜபுரம் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவன் மோகன் என்பவர் மிஷினில் சிக்கி உயிரிழப்பு இது மாதிரியான சிறுவன் உயிர் இருந்தது அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.