கின்னஸ் சாதனை படைத்த 50 வயது பெண்… குவியும் பாராட்டுகள்..!
ராணிப்பேட்டை மாவட்டம் நவல்பூரில் உள்ள தனியார் உடற்பயிற்சி நிலையத்தில், புஷ்பலதா(50) என்ற பெண் அர்த்த மச்சேந்திர ஆசன பயிற்சியை தொடர்ந்து 1 மணிநேரம், 25 நிமிடங்கள் செய்து புதிய கின்னஸ் சாதனை படைத்த நிலையில் அவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
நவல்பூரில் தனியார் பெண்கள் உடற்பயிற்சி நிலையம் செயல்பட்டு வருகின்றது. இங்கு பாரதிநகரை சேர்ந்த புஷ்பலதா(50) என்ற பெண் பயிற்சி பெற்று வரும் நிலையில், அர்த்த மச்சேந்திர ஆசனம் என்ற பயிற்சியை தொடர்ச்சியாக 1 மணிநேரம், 25 நிமிடங்கள் பயிற்சி செய்து புதிய கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.
இந்த சாதனையை தி கிங்டம் வேர்ல்டு ரெக்கார்டு அமைப்பு கின்னஸ் சாதனையாக அங்கீகரித்தது
-பவானி கார்த்திக்