விவசாயின் வீட்டின் பூட்டை உடைத்து பணம் நகை கொள்ளை..!
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த சித்தாத்தூர் கிராமத்தில் சேகர் (60 வயது) விவசாயம் செய்து வருகிறார்.
இவர்நேற்று விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கோவிலுக்கு சென்றுள்ளார். இதனை தொடர்ந்து இன்று காலை அக்கம் பக்கத்தினர் பார்த்தபோது சேகர் தங்கி இருந்த வீடு பூட்டை உடைக்கப்பட்டு இருந்ததைக் கண்டு சேகருக்கு தகவல் தெரிவித்தனர்.
உடனடியாக சேகர் தன்னுடைய மகன் சக்திவேல் மற்றும் மகள் தேவிகா இருவருக்கும் தகவல் தெரிவித்து உடனடியாகசேகர் தங்கியிருந்த வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீடு மற்றும் பீரோ உடைந்து இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
உள்ளே சென்று பார்த்தபோது சேகர் பீரோவில் வைத்திருந்த 4.5 சவரம் தங்க நகை மற்றும் ஒரு லட்சம் ரூபாய் பணம் திருடு போனது தெரிய வந்தது.
உடனடியாக குடியாத்தம் கிராமிய காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
விவசாயின் வீட்டின் பூட்டை உடைத்து பணம் நகை கொள்ளை போன சம்பவம் கிராம மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-பவானி கார்த்திக்