டெங்குவிற்கு பலியான 4 வயது சிறுவன்..!! பெற்றோர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்..?
சென்னை மதுரவாயலை சேர்ந்த 4 வயது சிறுவன் டெங்கு காய்ச்சலால் உயிர் இழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரவாயல், பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த அய்யனார் – சோனியா தம்பதியின் நான்கு வயது மகன் “ரக்ஷன்”.
சில நாட்களாக குழந்தைக்கு காய்ச்சல் இருந்ததால் பெற்றோர் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.
அப்போது அங்கு சிறுவனுக்கு ரத்த பரிசோதனை செய்யப்பட்டது.., செய்யப்பட்ட பின்னரே சிறுவனுக்கு “டெங்கு” இருப்பது உறுதியானது.
பரிதவித்த பெற்றோர் சிறுவனை எழும்பூர் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். ஆனால் சிகிச்சை பலனின்றி சிறுவன் “ரக்ஷன்” உயிர் இழந்துள்ளான்.
4 வயது சிறுவன் டெங்குவிற்கு பாலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து வருத்தம் தெரிவித்த பெற்றோர்.., அவர்கள் இருக்கும் பகுதியில் மழைநீர் தேங்கி இருப்பதால் கொசுக்கள் தாக்காத்தால் இந்த சம்பவம் நடந்திருக்க கூடும் என வேதனை தெரிவித்துள்ளனர்.
Discussion about this post