சிறுமியை கர்ப்பமாகிய 21 வயது வாலிபன்… கைது செய்து சிறையில் அடைத்த போலீசார்…!
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி தாலுகா திருமணஞ்சேரி பகுதியைச் சேர்ந்தவர் 16 வயதான பள்ளி மாணவி. இவர் அரசு பள்ளியில் பதினோராம் வகுப்பு படித்து வருகிறார்.
கடந்த ஆண்டு அவரது ஊரில் நடந்த திருவிழாவிற்கு சென்றபோது அவருக்கும் கறம்பக்குடி தாலுகா நெய்வேலி பகுதியைச் சேர்ந்த 21 வயதான சிவா என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறிய நிலையில், சிவா பதினோராம் வகுப்பு மாணவியை திருமணம் செய்து கொள்வதாக கூறி மூன்றுக்கும் மேற்பட்ட முறைகள் அவருடன் உடலுறவு வைத்துக் கொண்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், மாணவியின் வயிறு பெரிதாகவும் மிகவும் சோர்வாகவும் காணப்பட்டதால் இதுகுறித்து மாணவியின் தாயார் மாணவியிடம் விசாரித்ததார்.
பின்னர் மாணவி நடந்தவற்றை கூறியுள்ளார். இதனை கேட்ட தாயார் மாணவியை புதுக்கோட்டை அரசு ராணியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளார்.
அப்போது மாணவியை பரிசோதித்த மருத்துவர்கள் 5 மாதம் கர்ப்பமாக உறுதி செய்தனர். பின்னர் மருத்துவர்கள் கூறிய அறிவுரையின்படி மாணவியின் தாயார் ஆலங்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இளைஞர் சிவா மீது நடவடிக்கை எடுக்குமாறு புகார் அளித்தார்.
இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த ஆலங்குடி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் சிவாவை கைது செய்து புதுக்கோட்டை மகளிர் நீதிமன்றத்தில் அவரை ஆஜர் படுத்தி புதுக்கோட்டை சிறையில் அடைத்தனர்.
-பவானி கார்த்திக்