பேஸ்புக் காதலனால் 17 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்..! 3 பேருக்கு போலீஸ் வலை வீச்சு…!
திருமணம் செய்து கொள்வதாக சில ஆசை வார்த்தைகளை கூறி சிறுமியை கடத்திச் சென்று நண்பர்களுடன் பாலியல் வன்கொடுமை செய்த பேஸ்புக் காதலனை தேடி வருகின்றனர். இதுசம்பந்தமாக 2 பேரை கைது செய்து விசாரணை நடத்தியதில் பகீர் தகவல்கள் கிடைத்துள்ளது.
சென்னை அண்ணாநகர் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியை காணவில்லை என கடந்த சில நாட்களுக்கு முன் அரும்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரின் பெயரில் சிறுமியின் செல்போன் எண்ணை வைத்து காவலர்கள் ட்ராக் செய்த போது அந்த நம்பர் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள குக்கிராமத்தில் இருப்பதாக காட்டியுள்ளது.
அதையடுத்து நேற்று முன்தினம் போலீசார் சென்று அந்த வீட்டில் அடைத்து வைக்கப்பட்டிருந்த சிறுமியைமீட்டு அண்ணாநகர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர்.
அப்போது சிறுமியிடம் மகளிர் போலீசார் நடத்திய விசாரணையில் சிறுமி சொன்ன சில தகவல்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன் பாதிக்கப்பட்ட அந்த சிறுமிக்கு “பேஸ்புக் மூலம் வினோத் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.. அந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது.. இப்படி இருக்க கடந்த வாரம் வினோத் அந்த சிறுமியிடம் திருமணம் செய்துகொள்வதாக கூறி திருவண்ணாமலைக்கு அழைத்துச் சென்று பின் அங்குள்ள ஒரு வீட்டில் அடைத்து வைத்து பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்..
அதன் பின்னர் வினோத் தனது நண்பர்கள் அஜித்(21), மற்றும் ஜீவா(21) ஆகியோருக்கு தகவல் கொடுத்து மூன்று பேரும் சேர்ந்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். அதன் வினோத், ஜீவா, அஜித் ஆகிய 3 பேர் மீது கடத்தல், போக்சோ சட்டம் உட்பட்ட 7 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து தேடி வந்தனர்.
நேற்றிரவு திருவண்ணாமலை மாவட்டத்தில் பதுங்கியிருந்த ஜீவா, அஜித் ஆகியோரை கைது செய்து இன்று அதிகாலை அண்ணாநகர் அனைத்து மகளிர் காவல் நிலையம் கொண்டுவந்து விசாரணை நடத்தினர். இந்த வழக்கு தொடர்பாக பேஸ்புக் காதலன் வினோத்தை பிடிக்க தனிப்படை போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
‘’சமூகவலைதள பக்கத்தில் இளம்பெண்கள், சிறுமிகள் ஆகியோர் ரொம்ப உஷாராக இருக்கவேண்டும். காதல் வலையில் சிக்கவேண்டாம் என்று போலீசார் சார்பில் பலமுறை விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும் மீண்டும் , மீண்டும் பேஸ்புக் உள்ளிட்ட சமூகவலைதளம் மூலம் சிறுமிகள் சிக்கி அவதிப்பட்டு வருகின்றனர். எனவே, இளம்பெண்கள், சிறுமிகள் ஆகியோர் சமூகவலைதள பக்கத்தில் மிகுந்த கவனமுடன் இருக்கவேண்டும்’ என்று போலீசார் தெரிவித்தனர்.
– லோகேஸ்வரி.வெ
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..