13 வயது சிறுமியை கர்ப்பமாகிய 16 வயது சிறுவன்.. போலீஸ் வலைவீச்சு..!
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த மரம் வெட்டும் தொழிலாளியின் 13 வயது மகள். இவருக்கு அதே கிராமத்தை சேர்ந்த 16 வயது உறவினர் மகனுடன் பழக்கம் ஏற்பட்டது.
இந்த பலக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இதனால் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்துள்ளனர். பின்னர் இருவரும் ரகசியமாக திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
இந்தநிலையில் சில தினங்களுக்கு முன்பு சிறுமிக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் சிறுமியின் பெற்றோர் சிகிச்சைக்காக அருகில் இருந்த மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றனர்.
அப்போது மருத்துவர்கள் சிறுமியை பரிசோதித்த சிறுமி 3 மாத கர்ப்பமாக இருப்பது திரிய வந்தது. உடனே இதுகுறித்து அவர்கள் மாவட்ட குழந்தைகள் நல மையத்திற்கும், பெண்ணின் பெற்றோருக்கும் தெரிவித்தனர்.
இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் தனது மகளிடம் விசாரித்தபோது, மாமன் உறவுமுறையான 16 வயது சிறுவன் ரகசியமாக தன்னை திருமணம் செய்து கர்ப்பமாக்கியதாக தெரிவித்தார்.
இதுகுறித்து சிறுமியின் தாய் செய்யாறு அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் வந்த போலீசார், சிறுமியை திருமணம் செய்து கர்ப்பமாக்கிய சிறுவன் மீது, குழந்தை திருமண தடுப்பு பிரிவு, மற்றும் போக்சோ பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து 16 வயது சிறுவனை வலைவீசி தேடிவருகின்றனர்.
16 வயது சிறுவன் 13 வயது சிறுமியை ரகசியமாக திருமணம் செய்து கர்ப்பமாக்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
-பவானி கார்த்திக்