30 வயது இளம் பெண்ணிடம் காதலில் விழுந்த 15 வயது சிறுவன்..! இறுதியில் ஏற்பட்ட பரபரப்பு..!
சென்னை விருகம்பாக்கத்தை சேர்ந்த 30 வயது இளம்பெண் ஒருவர், அதே பகுதியில் உள்ள துணிக்கடை ஒன்றில் வேலை செய்து வந்தார். இதே போல் குடும்பத்தின் பொருளாதார சூழல் காரணமாக, 15 வயதான சிறுவன் ஒருவனும் அந்த கடையில் பணியாற்றி வந்தான்.
இந்தநிலையில் அந்த பெண்ணுக்கு திருமணம் ஆகாத நிலையில் 15 வயது சிறுவனுடன் பழகி இருவரும் காதலில் விழுந்துள்ளனர்.
சிறுவன் அந்த இளம்பெண்ணை அக்கா என்று அழைத்ததாலும், வயது வித்தியாசம் அதிகம் இருந்ததாலும், சக பணியாளர்கள் யாருக்கும் அவர்கள் மீது எந்த சந்தேகமும் ஏற்படவில்லை.
இதற்கிடையில் இளம்பெண்ணுக்கு சிறுவனுக்கும் இடையேயான பழக்கம், அடுத்தகட்டத்திற்கு நகர்ந்து அடிக்கடி தனிமையில் சந்தித்து பேசி உல்லாசமாக இருந்ததாக கூறப்படுகிறது.
மேலும் கடந்த சில நாட்களுக்கு முன்பு இருவரும் ரகசியமாக திருமணம் செய்து கொண்டதாகவும், இதுபற்றி யாரிடமும் சொல்லாமல் இருந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாளுக்கு நாள் இளம்பெண்ணும், சிறுவனும் நெருக்கமாக பழகும் விதம், சக ஊழியர்களிடையே சந்தேகத்தை ஏற்படுத்தியதால் இதுபற்றி சிறுவனின் பெற்றோரிடம் அவர்கள் தெரிவித்தனர்.
இதனை அறிந்து கொண்ட இளம்பெண், சிறுவனை அழைத்துக்கொண்டு வெளியூர் தப்பிச்செல்ல முடிவு செய்தார். அதன்படி இளம்பெண், சிறுவனுடன் வௌியூர் செல்வதற்காக கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை அடைந்துள்ளார்.
இதுபற்றி தகவல் அறிந்த சிறுவனின் பெற்றோர், உடனடியாக கிளாம்பாக்கம் சென்று, மகனை மீட்டனர். சிறுவனின் பெற்றோரை கண்டதும், இளம்பெண் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
இது குறித்து சிறுவனின் பெற்றோர் அளித்த புகாரின்பேரில் விருகம்பாக்கம் அனைத்து மகளிர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சிறுவனை கடத்த முயன்றதாக குழந்தைகள் நல ஆணைய அதிகாரிகளும் தகவல் தெரிவிக்கப்பட்டு விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர்.
-பவானி கார்த்திக்