ஆன்லைன் சூதட்டத்தில் பணத்தை இழந்த எல் எல்ஐசி முகவர்.. விரக்தியில் மின்சாரம்…!
சேலம் மாவட்டம் தாரமங்கலம் பகுதியை சேர்ந்த கந்தசாமி எல்ஐசி முகவர். இவரது மனைவி மகாலட்சுமி தாரமங்கலம் பிடிஓ ஆபீசில் ஜூனியர் அசிஸ்டெண்டாக வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.
இந்தநிலையில் கந்தசாமி ஆன்லைன் சூதாட்டம் விளையாட்டிற்கு அடிமையான அவர் அதில் லட்சக்கணக்கில் பணத்தை இழந்தார்.
இதையடுத்து கந்தசாமி தெரிந்தவர்கள் அக்கம் பக்கத்தினரிடம் கடன் வாங்கி விளையாடி வந்தார். அவர்கள் கடனை அடைக்க தனது பூர்வீக நிலத்தை விற்று அடைத்துள்ளார்.
இருப்பினும் கடனை முழுவதுமாக அடைக்க முடியாததால் கடன் கொடுத்தவர்கள் கந்தசாமியிடம் பணத்தை திருப்பி கேட்டு தொல்லை கொடுத்து வந்துள்ளனர். இதனால் மனவேதனை அடைந்த கந்தசாமி வீட்டில் ஒரு அறைக்கு சென்று மின்சார கம்பியை உடலில் சுற்றிக் கொண்டு, மின்சாரத்தை பாய்ச்சி தற்கொலை செய்து கொண்டார்.
வெகுநேரம் ஆகியும் அறையில் இருந்து கந்தசாமி வெளியே வராததால் சந்தேகம் அடைந்த அவரது மனைவி ஜன்னல் வழியாக பார்த்தபோது கந்தசாமி உயிரிழந்த நிலையில் தரையில் விழுந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
இதையடுத்து தகவலறிந்த தாரமங்கலம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-பவானி கார்த்திக்