ADVERTISEMENT
14வயது சிறுவனால் ஜாம்பஜார் பகுதியில் ஏற்பட்ட பரபரப்பு…!
சென்னை ஜாம்பஜார் பகுதியில் உள்ள நெரிசல் மிகுந்த பாரதி சாலையில் நேற்று மாலை 6 மணியளவில், கார் ஒன்று அதிவேகமாக வந்துள்ளது. அப்போது அந்தப் பகுதியில் இருந்த இருசக்கர வாகனங்கள் மற்றும் பொது மக்கள் மீது மோதி விபத்து ஏற்படுத்தியுள்ளது.
இதையறிந்த ஜாம்பஜார் போலீசார் உடனடியாக விபத்து ஏற்படுத்திய அந்த காரை சுமார் 1 கி. மீ தூரம் துரத்திச் சென்றனர். போலீசார் பின்தொடர்வதை அறிந்த கார் தருமாறாக வேகமெடுத்தது. பின்னர் காரை மடக்கிப் பிடித்து காரில் இருந்த ஓட்டுனரைப் பார்த்து போலீசார் அதிர்சி அடைந்தனர். காரின் ஓட்டுநர் இருக்கையில் இருந்தது 14 வயதேயான சிறுவன் அவலை பிடித்து கார் யாருடையது என்று விசாரித்ததில் இவர் 9ம் வகுப்பு படித்து வருவதாகவும், தனது பெரியப்பாவின் காரை எடுத்துக் கொண்டு உடன் படிக்கும் வகுப்புத் தோழருடன் காரில் வந்ததாக தெரிவித்துள்ளார்.
இதையடுத்து ஜாம்பஜார் பகுதியில் ஏற்பட்ட இந்த விபத்து தொடர்பாக வழக்குப் பதிவு செய்த அண்ணா சதுக்கம் போக்குவரத்து போலீசார் காரில் இருந்த இரண்டு சிறுவர்களிடமும் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இந்த விபத்தில் 3க்கும் மேற்பட்ட பொதுமக்கள் காயமடைந்துள்ளதோடு, 5க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் சேதமடைந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-பவானி கார்த்திக்
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
தொடர்கதை -2 – Written – 500
“தோல்வியை கண்டு அஞ்சாதே வெற்றியை கண்டு கர்வம் கொள்ளாதே”