பிச்சையெடுத்தே 7.5கோடி சொத்து..! 1.2 கோடி ரூபாய் செலவில் வீடு..!! டேய் எப்புற்றா..?
பிச்சைகாரர் என்றாலே பொதுவாகவே கிழிந்த உடை.., உண்ண உணவு இல்லாமல் இருக்க இருப்பிடம் இல்லாமல் இருப்பவர் என்று நினைத்து கொண்டு இருப்போம். ஆனால் அதற்கு நேர் மாறாக இங்கு இருவர் செய்துள்ள செயல் பலரிடமும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
பிச்சை எடுப்பதையே தொழிலாக செய்து.., அதில் கிடைத்த லாபத்தின் மூலம் சொத்துக்கள் சேர்த்துள்ளார். மும்பையை சேர்ந்த “பாரத் ஜெயின்“.., இவரின் சொத்து மதிப்புக்கள் மட்டும் 7.5 கோடி.
மாதம் வரும் லாபம் :
எகனாமிக் டைம்ஸ் அறிக்கையின் படி, மும்பையை சேர்ந்த பாரத் ஜெயின் என்பவர் உலகளவில் பணக்கார பிச்சரக்காரர் என்று சொல்லப்படுகிறது. மும்பை தெருக்களில் பிச்சை எடுத்தும் வரும் இவருக்கு மனைவி, இரண்டு மகன்கள், சகோதரர், தந்தை என அனைவரும் கூட்டாக வசித்து வருகின்றனர்.

சிறு வயதில் ஏழ்மையின் காரணமாக முறையான கல்வியை தொடர முடியாமல் பிச்சை எடுக்க ஆரமித்துள்ளார். பிச்சை எடுத்து மாதம் 60,000 ரூபாய் முதல் 75,000 ரூபாய் வரை சம்பாதித்து 7.5 கோடி ரூபாய்க்கு சொத்து சேர்த்துள்ளார். மேலும் இவர் 1.2 கோடி ரூபாய் மதிப்பில் 2BHK பிளாட் ஒன்றை வாங்கி அதில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
மேலும் தானேவில் இரண்டு கடைகள் வைத்துள்ளதாகவும் கடையில் இருந்து 30,000 ஆயிரம் ரூபாய் வரை லாபம் கிடைப்பதாகவும் கூறப்படுகிறது. மும்பையின் முக்கிய பகுதியான சத்ரபதி சிவாஜி மகராஜ் ரயில் நிலையம் மற்றும் ஆசாத் மைதானம் ஆகிய இரண்டு பகுதிகளில் பிச்சை எடுத்து 45,000 முதல் 50,000 வரை சம்பாதிப்பதாகவும் சொல்லப்படுகிறது.
2020ம் ஆண்டு மட்டும் பிச்சை எடுத்து அந்த ஆண்டில் மட்டும் அவர் சேர்த்த பணம் 9 லட்சம் ரூபாய், இதுவரை அவர் பிச்சை எடுத்து சேர்த்த பணம் 7.5 கோடி ரூபாய் என சொல்லப்படுகிறது. நாள் ஒன்றுக்கு பிச்சை எடுத்து மட்டும் தினமும் 2500 ரூபாய் வரை சம்பாதிப்பதாகவும் தெரிவித்தார்.
இவர் மட்டும் தான் பிச்சை எடுப்பதாகவும் மகன்கள் சி.பி.எஸ்.இ படிப்பதாகவும், தாய் மற்றும் தந்தைக்கு கடை வைத்துக் கொடுத்துள்ளதாகவும் கூறியுள்ளார். பெற்றோர்கள் மற்றும் மகன்கள் பிச்சை எடுக்க வேண்டாம் என கூறியும்.., சாகும் வரை பிச்சை எடுப்பேன் என்றும் அவர் கூறியுள்ளார்.

















