செவ்வாய் தோஷம் நீங்க; இதை செய்யுங்கள்..!!
செவ்வாய் கிழமை தமிழ் கடவுள் “முருகனுக்கு” உகுந்த நாள்,
முருகனை நம்பினோர் கை விடப் படார் என்று சொல்லுவார்கள். அது ஆயிரம் மடங்கு உண்மை…
மனம் உருக, உள்ளம் உருக “முருகா” என்று கூப்பிட்டால் உடன் வந்து நிற்பார்.
வாழ்வில் சிலருக்கு திருமண தடை ஏற்படும். ஒரு சிலருக்கு செவ்வாய் தோஷமும் இருக்கும், அதை சரி செய்ய சில பரிகாரங்கள் செய்ய சொல்லுவார்கள்.
அது அவரவர் நம்பிக்கை, ஆனால் பரிகாரம் இல்லாமல் செவ்வாய் தோஷம் நீங்க.., இதை செய்தாலே போதும்.
வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை அன்று, அதிகாலையே முருகன் கோவிலுக்கு சென்று, “நெய் தீபம்” ஏற்றி விரதம் இருந்து வழிபாடு செய்தால் செவ்வாய் தோஷம் நீங்கி விடும்.
தீர்க்க முடியாத பிரச்சனை உள்ளவர்களும், அசைவம் சாப்பிடாமல் விரதம் இருந்து வழிபாடு செய்தால், தீராத பிரச்சனைகள் நீங்கி, சந்தோஷத்தை தரும்.
மேலும் இதுபோன்ற பல ஆன்மீக தகவல்கள் பற்றி தெரிந்துகொள்ள, தொடர்ந்து படித்திடுங்கள்.
-வெ.லோகேஸ்வரி

















