மேல்மலையனூரில் கண்டெடுக்கப்பட்ட அம்மன் சிற்பம்..!
விழுப்பூர் மாவட்டம் மேல்மலையனூர் அருகே உள்ள பருதிபுரம் கிராமத்தில், 17ம் நூற்றாண்டில் இருந்த துர்க்கை பார்வதி சிற்பங்களை அதே கிராமத்தை சேர்ந்த செங்குட்டுவன் கண்டு பிடித்துள்ளார்.
இதுகுறித்து அவர் பேசிபழங்கால சிற்பங்கள்யது, பருதிபுரம் கிராமத்தில் பழங்கால சிற்பங்கள் இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பெயரில் அங்கு சென்று ஆய்வு நடத்தினோம். ஆய்விற்கு பின்னர் 4 அடி உயரதில் விஷ்ணு துர்க்கை சிற்பம் பலகை கல்லிலும் 2 அடி உயரத்தில் பார்வதி சிற்பமும் கிடைத்தது.
விஷ்ணு துர்க்கை கல்லில், துர்க்கை நான்கு கரங்களுடன் , ஆடை அணிகலன்கள் வித்தியாசமாக இருந்தன. கால் களுக்கு கீழே இரண்டு வீரர்கள் தங்களை தாங்களே பலி கொடுப்பது போல அமர்ந்து இருக்கும் காட்சியும், கல்லில் இருப்பதாக கூறினார்.
பார்வதி சிற்பத்தில் ஒரு காலை மடக்கி மற்றொரு காலை தொங்கவிட்டு கொண்டு அமர்ந்து உள்ளார். இருக்கைகளிலும் உடுக்கை மற்றும் சூலம் வைத்து கொண்டுள்ளார். இதில் அவர், சிவபெருமான் போல தோற்றம் அளிக்கிறார். மற்றொரு கோணத்தில் பார்த்தால் காளியாகவும் இருக்கிறார்.
இவை 17ம் நூற்றாண்டில் வழிபட்ட கல்வெட்டு என, ஆய்வாளர் விஜய வேணுகோபால் உறுதி செய்தார். 17ம் நூற்றாண்டின் வளர்ச்சியை இந்த சிற்பத்தில் காண முடிகிறது. என கூறினார் ஆய்வாளர் செங்குட்டுவன்.
– வெ.லோகேஸ்வரி

















