அவகேடா இவ்வளவு செய்யுமா ? இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே..!
தற்போது பிரபலமாகி கொண்டு இருக்கும் அவகேடா பழம், உணவில் மட்டும் தான் முக்கியதுவம் அளிக்கிறது. என்று பார்த்திருப்போம். ஆனால், இது முகத்திற்கும் முக்கியத்துவம் கொடுத்துள்ளது என்றால்.
அவகேடா பழத்தில் வைட்டமின்கள், கால்சியம், இரும்புச்சத்து, மற்றும் பொட்டசியம் இருக்கிறது என அனைவருக்கும் தெரியும். எனவே பலரும் இதை விரும்பி வாங்குகின்றனர். இதை சிலர் வெண்ணெய் பழம் என்றும் அழைப்பார்கள்.
அவகேடா பழத்தின் மேற் தோலை உரித்து, அதன் சதையை மட்டும் எடுத்து கொள்ளவும். அதில் ஒரு ஸ்பூன் தேன், ஆலிவ் ஆயில், தயிர் சேர்த்து நன்கு அறைத்து பசை பதத்திற்கு எடுத்துக்கொள்ளவும்.

பின் முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற செய்யவும். 15நிமிடம் கழித்து குளிர்ந்த தண்ணீரில் முகத்தை கழுவவும்.
இதனால் முகம் என்றும் பொலிவுடன் இருக்கும். வறண்ட சருமம் கூட, மென்மையாக மாறிவிடும்.
வெயிலினால் ஏற்படும் தாக்கத்தால் பலருக்கும் முகம் கருத்து விடும். இதை உபயோகித்தால், கருத்த சருமமும், பொலிவாக மாறிவிடும்.

முகத்தில் உள்ள அழுக்கை வெளியேற்றுவதால், விரைவில் முகம் சுருங்காமல் என்றும் அழகாக இருக்கும்.

















