கடந்த அக்டோபர் மாதம் 2022ம் ஆண்டு எல்லையோரத்தில் அமைந்துள்ள கிராமங்கள் இனி நாட்டின் முதல் கிராமங்கள் என அழைக்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்திருந்தார். அந்த அறிவிப்பின் படி முதல் முறையாக மானா கிராமம் அமைந்துள்ளது.
உத்தரகாண்ட் மாநிலத்தின் மானா கிராமத்தின் நுழைவாயிலில், ‘இந்தியாவின் முதல் கிராமம்’ என்ற வாசகப் பலகையை மத்திய அரசு வைத்துள்ளது. இது சாமோலி மாவட்டத்தில் பத்ரிநாத் அருகே அமைந்துள்ள சுற்றுலா தலமாகும். இந்த இடங்களுக்கு அடிக்கடி ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.
பழங்குடியின மக்கள் வசிக்கக்கூடிய இந்த கிராமத்தில் மே முதல் நவம்பர் மாதத்தில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிவது வழக்கமாகும். நீலகண்டா சிகரம், தப்ட் குந்த், மாதா மூர்த்தி கோவில், வசுதாரா நீர்வீழ்ச்சி ஆகியவை மானா கிராமத்தில் கண்டு ரசிக்க வேண்டிய மற்றும் பிரபலமான சுற்றுலா தலங்கள் ஆகும்.

















