கடந்த 8ம் தேதி தமிழகம் வந்த பிரதமர் மோடி, சென்னை விமான நிலையத்தில் புதிய முனையம் திறப்பு, வந்தே பாரத் ரயில் சேவை தொடக்கம், விவேகானந்தர் இல்லத்தை பார்வையிடுவது என பரபரப்பாக சுற்றி முடித்தார். இதனிடையே எடப்பாடி பழனிசாமி பிரதமரை சந்திக்க நேரம் கேட்டதாகவும், பிரதமர் மோடி அவரை சந்திக்க விருப்பம் தெரிவிக்கவில்லை என்றும் தகவல்கள் வெளியாகின.
இதுபோதாது என்று, பிரதமரே சந்திக்கலைன்னு சொல்லிட்டாருன்னா… அதிமுக – பாஜக கூட்டணி அவ்வளவு தான் என்றும் சைக்கிள் கேப்பில் கிளப்பிவிட்டு சந்தோஷப்படுக்கொண்டனர். எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓபிஎஸை பிரதமர் சந்திக்காதது ஏன்? இருவரையும் சந்திக்க நேரம் ஒதுக்கப்பட்டதா? என பல கேள்விகள் வட்டமிட்டு வரும் நிலையில், தற்போது உண்மை என்ன என்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
அதாவது சென்னை வந்த பிரதமர் மோடியை சந்திக்க எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் நேரம் கேட்டது உண்மை தானாம். எதிர்கால கூட்டணி குறித்தும், உட்கட்சி பிரச்சனைகள் பற்றி விவாதிக்கவும் எடப்பாடி பழனிசாமி பிரதமரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார். அதேபோல் தர்மயுத்தம் 2.ஓவை ஆரம்பித்துள்ள ஓ.பன்னீர்செல்வமும் அதிமுகவில் தனக்கு நேர்ந்த அவலங்களை சொல்லி, நியாயம் கேட்க பிரதமரிடம் நேரம் கேட்டுள்ளார்.
ஆனால் பிரதமர் மோடியே இந்த முறை தமிழ்நாட்டிற்கு தான் வருவது முழுக்க, முழுக்க நலத்திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக மட்டுமே என மக்கள் மனதில் பதிய வைக்க வேண்டும் என தனது அதிகாரிகளுக்கு ஸ்ட்ரிக்ட்டாக உத்தரவு போட்டுவிட்டாராம். அதனால் தான் ஈபிஎஸ், ஓபிஎஸின் அரசியல் தொடர்பான சந்திப்புகள் தவிர்க்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
தற்போது அரசியல் வட்டாரத்தில் வெளியாகியுள்ள தகவலின் படி, நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் பல மாதங்கள் இருப்பதால் இந்த கூட்டணி தொடர்பான சர்ச்சையை பிறகு பேசிக்கொள்ளலாம் என பிரதமர் நினைத்ததாக கூறப்படுகிறது. அதேபோல் இபிஎஸ், ஓபிஎஸ் இருவரும் கட்சி சம்பந்தமாக பேசவே தன்னை சந்திக்க முயல்கிறார் என்பதை முன்பே கணித்த பிரதமர், அதிமுகவின் உட்கட்சி விவகாரத்தில் தலையிட துளியும் விருப்பம் காட்டாததால் தான் இருவரது சந்திப்பையும் தவிர்த்தார் என்ற தகவலுல் வெளியாகியுள்ளது.