நடிகை குஷ்பு திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதை அடுத்து ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் அவர் விரைவில் குணமடைய வேண்டுமென வாழ்த்து கூறி வருகின்றனர்.
சமீபத்தில் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக நியமிக்கப்பட்ட நடிகை குஷ்பு சுந்தர், காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நடிகை தனது உடல்நிலை குறித்து சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார் போட்டோஸ் சோசியல் மீடியாவில் வைரலாகி ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
மருத்துவமனை படுக்கையில் இருப்பது போன்ற இரண்டு போட்டோக்களை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள குஷ்பு, அத்துடன் “நான் சொல்வது போல், காய்ச்சல் மோசமானது. அது என்னைப் பாதித்துவிட்டது. அதிக காய்ச்சல், உடல் வலி மற்றும் பலவீனம் ஆகியவற்றைக் கொன்றது. அதிர்ஷ்டவசமாக, ஐதராபாத் அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்டுள்ளேன்” எனக்குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர் தனது ரசிகர்களின் உடல்நலக் கவலைகளைப் புறக்கணிக்க வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளார். “தயவுசெய்து உங்கள் உடல் மெதுவாகச் சொல்லும் அறிகுறிகளை புறக்கணிக்காதீர்கள. மீட்புக்கான பாதையில் உள்ளேன் ஆனால் அதற்கு நீண்ட தூரம் செல்ல வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

குஷ்புவின் இந்த ட்வீட்டை பார்த்து பதறிப்போன திரைப்பிரபலங்கள் பலரும் அவர் விரைவில் குணமடைய வேண்டும் என வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். நடிகை ஸ்ரேயா மற்றும் நிக்கி கல்ராணி ஆகியோர் “விரைவில் குணமடையுங்கள்” என பதிவிட்டுள்ளனர். ஸ்ரீதேவி விஜயகுமார் “டேக் கேர் அக்கா” என்றும், கீர்த்தி சுரேஷ், ராஷி கண்ணா ஆகியோரும் “Get well soon” என பதிவிட்டுள்ளனர்.

















