Detailed verdict of convict Gnanasekaran
அண்ணா பல்கலை கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளி ஞானசேகரனுக்கு 30 ஆண்டுகளுக்கும் குறைப்பு இல்லாத ஆயுள் தண்டனை விதித்து மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
சிறையில் ஞானசேகரனுக்கு எந்த சலுகைகளும் வழங்கக் கூடாது. 30 ஆண்டுகள் சிறை தண்டனையை குற்றவாளி ஏககாலத்தில் அனுபவிக்க வேண்டும் என்று தீர்ப்பளித்துள்ளார். மேலும் கூடுதலாக 90 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. Detailed verdict of convict Gnanasekaran
இதில் 30 ஆண்டுகளுக்கு குறைப்பு இல்லாத ஆயுள் தண்டனை என்பதன் பொருள் “தண்டனை விலக்கு இல்லை” என்று அர்த்தம். அதாவது தண்டனை விதிக்கப்பட்ட நபர் தனது வாழ்நாள் முழுவதும் அல்லது தண்டனை விதிக்கப்பட்ட காலத்திற்கு கண்டிப்பாக சிறையில் இருக்க வேண்டும், விடுதலை, பரோல் அல்லது தண்டனை விலக்கு மூலம் முன்கூட்டியே விடுதலை செய்ய வாய்ப்பில்லை.
நீதிபதி தனது அதிகாரத்தை பயன்படுத்தி எந்தவொரு விடுதலையையும் வெளிப்படையாக நிராகரிக்கும் சட்ட பிரிவு இது. ஜனாதிபதி மன்னிப்பு (பிரிவு 72) அல்லது ஆளுநரின் கருணை (பிரிவு 161) தவிர, எந்த அதிகாரமும் (அரசாங்கம் அல்லது சிறை அதிகாரிகள் உட்பட) தண்டனையை குறைக்க முடியாது. நன்னடத்தை காரணமாக விடுதலை எல்லாம் செய்ய முடியாது. பரோலும் வழங்க முடியாது.
இதுதொடர்பாக அரசு தரப்பு வழக்கறிஞர் மேரி ஜெயந்தி செய்தியாளர்களிடம் பேசுகையில், ”இந்த தீர்ப்பை வரவேற்கிறேன். இது பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு கிடைத்த நீதி. இதற்காக தான் நாங்கள் கடுமையாக உழைத்தோம். இன்று வழங்கியிருக்கும் தீர்ப்பில் 30 ஆண்டுகளில் குறைப்பு இல்லாத ஆயுள் தண்டனை என்பது தான் மிகவும் கவனிக்கப்பட வேண்டியது. இதில் வேறு எந்த சலுகை அடிப்படையிலும் அவர் சிறையை விட்டு வெளியே செல்ல முடியாது. அவர் சிறைக்குள் தான் இருக்க வேண்டும். அதுதான் இந்த தீர்ப்பின் சிறப்பம்சம். Detailed verdict of convict Gnanasekaran
அதேபோன்று, ஒவ்வொரு பிரிவிலும் இருக்கக்கூடிய அதிகபட்ச தண்டனையைத் தான் நீதிபதி வழங்கியுள்ளார். இதுதவிர அபாரதத் தொகையை இழப்பீடாக பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு வழங்குபடியும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
இது தவிர, அரசு எவ்வளவுத் தொகையை பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு இழப்பீடாக வழங்க முடிவு செய்துள்ளதோ, அதையும் வழங்க வேண்டும் என தீர்ப்பளித்துள்ளார். இது மிகவும் சிறப்பான தீர்ப்பு. அரசுத் தரப்பு வழக்கறிஞர்களுக்கு கிடைத்த மாபெரும் வெற்றி” என மேரி ஜெயந்தி தெரிவித்தார்.















