பிரதமர் மோடி ராஜஸ்தானில் பிகானீர் நகரில் பொது கூட்டத்தில் பேசினார். அப்போது அவர் பேசியதாவது, பஹால்காம் தாக்குதலுக்கு பிறகு, ராணுவம், கடற்படை, விமானப்படைக்கு முழு சுதந்திரம் தரப்பட்டது. நமது படைகள் 22 நிமிடத்தில் 9 தீவிரவாத முகாம்களை துவம்சம் செய்தனர். ரஹிம்யார் விமானப்படைத் தளம் கோமா நிலைக்கு சென்று விட்டது (இந்த விமானப்படை பஞ்சாப் மாநிலம் ரஹிம்யார் நகரில் உள்ளது).
‘இந்த விமானப்படைத் தளத்தை இயங்க வைப்பதே இனி கடினம்தான். நமது ராணுவப்படைகளிடம் பாகிஸ்தான் முழங்காலிட்டது. அணு ஆயுதத்தை காட்டி மிரட்ட பார்த்தார்கள். நாம் பின்வாங்கவில்லை. பாகிஸ்தானால் நம்முடன் மோத முடியாது. அதனால், தீவிரவாதத்தை தூண்டுகிறது. இனிமேல், பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை கிடையாது.
பேச்சுவார்த்தை நடத்தினால் , அது பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பற்றி மட்டும்தான் இருக்கும். நமது குங்குமம் பாகிஸ்தானுக்கு தோட்டா பவுடாகி போனது.
இவ்வாறு அவர் பேசினார்.