ஜம்மு காஷ்மீரில் கடந்த செவ்வாய்க்கிழமை நடத்தப்பட்ட இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானை சேர்ந்த ஹாசிம் மூசா என்ற தீவிரவாதி தலைமை தாங்கியுள்ளான். தாக்குதலில் ஈடுபட்ட அலி தக்னா, ஆசிப் பாவுஜி ஆகியோர் பாகிஸ்தானை சேர்ந்தவர்கள். ஆதில் தோக்கல், அசன் ஆகியோர் காஷ்மீரை சேர்ந்தவர்கள். காஷ்மீரை சேர்ந்த தீவிரவாதிகளின் வீடுகள் உடைக்கப்பட்டு தரைமட்டமாக்கப்பட்டுள்ளது. தீவிரவாதிகள் பற்றி துப்பு கொடுத்தால் 20 லட்சம் பரிசாக வழங்கப்படும் என ஜம்மு காஷ்மீர் போலீசார் அறிவித்துள்ளனர்.
இதற்கிடையே, பஞ்சாப் எல்லையில் பிரேஷ்பூர் பகுதியில் தவறுதலாக இந்திய எல்லையை தாண்டி சென்ற இந்திய எல்லை பாதுகாப்புப்படை வீரர் பி.கே.சிங் என்பவரை பாகிஸ்தான் ராணுவம் பிடித்து வைத்துள்ளது. இவரை விடுவிப்பது தொடர்பாக இரு நாட்டு அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையே, காஷ்மீரில் பண்டிபூரா பகுதியில் இந்திய ராணுவமும் காஷ்மீர் போலீசாரும் இணைந்த நடத்திய தாக்குதலில் லஷ்கர் இ தொய்பாவின் முக்கிய காமெண்டரான அல்டாப் லல்லி சுட்டுக் கொல்லப்பட்டார்.