பருவமழை காலம் முடிய உள்ள நிலையில் காற்றின் திசை மாறுபாடு காரணமாக தமிழகத்தில் பரவலாக மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் தென்கிழக்கு வங்க கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக இந்தியா வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

வடகிழக்கு பருவமழை காலம் என்பதால் தமிழகம் மற்றும் புதுவையில் கடந்த இரண்டு மாதங்களாக மழை பெய்து வந்தது. மாண்டஸ் புயலின் காரணமாக பருவமழை அதன் சராசரி அளவை எட்டியது. இந்நிலையில் பருவமழையின் தீவிரம் குறையும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தமிழகத்தில் மேலடுக்கு சுழற்சி மற்றும் காற்றின் திசை மாறுபாடு காரணமாக கடலோர மாவட்டங்களில் மழை தொடரும் என்று அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதால் தமிழகத்தில் தென்கிழக்கு மாவட்டங்களில் வரும் 20 மற்றும் 21 தேதிகளில் கனமழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 48 மணி நேரத்தில் தெற்கு வங்க கடல் பகுதியை நோக்கி நகரும் எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
















