கூலிப்படை மூலம் மருமகனை தீத்துக்கட்ட முயன்ற மாமனார்…. கைது செய்த போலீசார்…!
திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தில் இயங்கி வரும் ஒரு தனியார் பெட்ரோல் பங்கில் நேற்று நள்ளிரவு அந்த நிறுவனத்தில் பணிபுரியும் விஜி என்பவர் உட்பட இரண்டு பேர் படுத்து தூங்கிக் கொண்டிருந்தனர்.
அப்போது, அந்த இடத்திற்கு வந்த மர்மந்பர்கள் விஜியை கத்தியை கொண்டு சரமாரியாக கொலை வெறித் தாக்குதல் நடத்தி உள்ளனர்.
இதை தடுக்க முயன்ற மற்றொரு ஊழியறியும் சராமாரியாக வெட்டி விட்டு தப்பி சென்றுள்ளனர். ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த இருவரையும், தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் மீட்டு உயிர்க்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்த கொலைவெறி தாக்குதலுக்கு என்ன காரணம் யார் தாக்குதல் நடத்தியது என்பதை குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
காவல்துறையினர் பெட்ரோல் பங்கில் இருந்த சிசிடிவி ஹார்ட்டிஸ்க் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டதில், தாக்குதலுக்கு உள்ளான பெட்ரோல் பங்க் ஊழியர் விஜி, சென்னசமுத்திரம் பகுதியை சேர்ந்த காளி கோயில் பூசாரி ஜானகிராமன் மகள் ஜெயஸ்ரீ என்பவரும் காதலித்து கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து தனி குடித்தனம் நடத்தி வந்துள்ளனர். இந்த நிலையில்,
இவர்களின் காதல் திருமணத்தை எதிர்த்து வந்த காளி கோயில் பூசாரி தனது மருமகனான விஜி என்பவரை கூலிப்படை மூலம் கொலை செய்ய திட்டமிட்டு கூலிப்படையை அனுப்பியது தெரிய வந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து விஜியை கொலை செய்ய முயன்ற காளி கோயில் பூசாரி ஜானகிராமன் மற்றும் அவரது மகன் ராஜேஷ் இருவரையும் செங்கம் காவல் துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
-பவானி கார்த்திக்

















