Tuesday, June 17, 2025
Madhimugam
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
Madhimugam
No Result
View All Result

தியானத்திற்கு வந்த மோடி..! வெட்கம்.. மகாவெட்கம்..! கடுமையாக விமர்சித்த கி.வீரமணி..!

தேர்தல் சட்டப்படி, சைகைகள் (Visual representation) மூலம் செய்யும் பிரச்சாரத்தை காலக்கெடுவுக்குப்   பின்னர்   செய்வது   சட்ட விரோதம் ஆகும்.  இதைத் தேர்தல் ஆணையம் ஏன் வேடிக்கை பார்த்து, இந்த வித்தைக்குத் துணை போகிறது என்பது புரியவில்லை..?

by logeshwari
May 30, 2024

தியானத்திற்கு வந்த மோடி..! வெட்கம்.. மகாவெட்கம்..! கடுமையாக  விமர்சித்த  கி.வீரமணி..!

 

 

 

 

இந்தியாவில்   லோக்சபா தேர்தல் 7 கட்டமாக நடைபெற உள்ள நிலையில் அதில் 6 கட்ட தேர்தல்   நடைபெற்று முடிந்தது. 7ம் கட்ட வாக்கு பதிவு ஜூன் 1ம் தேதி நடைபெற உள்ள நிலையில்   பிரதமர் மோடி   இன்று   கன்னியாகுமரிக்கு   வருகை தந்துள்ளார்.

கன்னியாகுமரியின்   கடல்   நடுவே   உள்ள விவேகானந்தர் தியான மண்டபத்தில் நாளை முதல் தொடர்ந்து 3 நாட்களுக்கு தியானம் மேற்கொள்ள உள்ளார். அதற்கு பல அரசியல் கட்சி தலைவர்களும் குறிப்பாக விமர்சித்து வருகின்றனர். குறிப்பாக திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி,   மோடியின்   தியான   திட்டத்தை     கண்டித்துள்ளார்.

பிரச்சார பீரங்கி :

இதுகுறித்து கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஏழு கட்டங்களாக நடைபெறும் தேர்தலை, அவர்களது பிரச்சார வசதிக்கேற்ப அமைத்து கொண்ட பாஜக ஒரே ஒரு “பிரச்சார பீரங்கியான” பிரதமர் நரேந்திர மோடிக்கு, அவர் எதிர் பார்த்த பலனைத் தரும் என்ற நம்பிக்கை நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது போல.

அதோடு மட்டுமா..? அதுவே இந்தியா கூட்டணியின் பிரச்சாரப் பெருமழை நாடெங்கும் பரவலாகப் பெய்து, மோடியின் புளுகு மூட்டையை பிரச்சாரக் குத்தூசியால் கிழித்து மக்கள் முன் அவிழ்த்துக் கொட்டி, உண்மையை ஒரு குண்டு மணி அளவுக்குக்கூட அவரது பிரச்சாரத்தில்   கண்டறிய   முடியாது   என்பதை நாளும் எதிர்க்கட்சித் தலைவர்களது பேச்சுகள் சூறாவளியாகி   சுழன்றடித்து, விழிப்புணர்வை ஏற்படுத்தி, இளைஞர்கள், மகளிர், விவசாயிகள், வியாபாரிகள், நடுநிலையாளர்கள் ஆகிய அனைத்துத் தரப்பினரையும் விழித்தெழச் செய்ய வாய்ப்பானது.

தோல்வி பயம் :

இதனால் தோல்வி பயம் உச்சக்கட்டத்தில் பா.ஜ.க.வுக்கும், அதன் பிரதான பிரச்சாரகரான பிரதமர் மோடிக்கும் ஏற்பட்டுவிட்டதால், ”புதுப்புது வித்தைகளை” நாளும் நிகழ்த்திக் காட்டுவதில் நிபுணராகவே பிரதமர் மோடி வலம் வருகிறார்..

கடைசி கட்டத் தேர்தல் பிரச்சாரம் இன்றோடு (30.5.2024) முடிவடைந்துள்ளது – அவரது வாரணாசி தொகுதி உள்பட. இன்று (30.5.2024) கன்னியாகுமரிக்கு வந்து விவேகானந்தர் பாறையில்   உள்ள   நினைவு   மண்டபத்தில்   ‘மூன்று நாள் தியானம்’ என்று ஓர் அறிவிப்பு தந்து.   ஒரு   புது வித்தை மூலம், ஒன்றாம் தேதி நடக்கின்ற   ஏழாம் கட்டத் தேர்தலில் பாஜகவின் வாக்கு சரிவினைத் தடுத்து, அனுதாபத்தோடு, பக்தி உணர்வுள்ள ஒரு சிலர் இதனால் பாஜகவுக்கு வாக்களிக்க வாய்ப்பு ஏற்படாதா..? என்றுதான் அவர் கணித்திருக்கக் கூடும்.   அல்லது   அந்தத்   திட்டத்திற்குப்   பின்   ஏதோ ஒரு  சூட்சமம் புதைந்திருக்கிறது.

பாஜக தேய்பிறை :

மேற்கு   வங்கத்தில்   ஜூன்   ஒன்றாம் தேதி   நடைபெற   விருக்கும்   தேர்தலில் “விவேகானந்தர் முன் தியானம்”   என்ற   வித்தை   வாக்குகளைப் பெற வழி ஏற்படுத்தும் என்ற நப்பாசையும்கூட காரணமாக இருக்கலாம். வாக்குப் பெட்டி எதிர்பார்த்த அளவுக்கு நிரம்பாதது   மட்டுமல்ல,   பா.ஜ.க.வுக்கு   வாக்களிக்க,   வாக்காளர்களை மல்லுகட்டி அழைத்து வரும் ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் அவர்கள் ஒத்துழைப்பு மோடியின் பா.ஜ.க.வுக்கு ‘தேய்பிறை’ ஆகிவிட்டது.

ஆர்.எஸ்.எஸ். தனித்தே   நிற்கும்   நிலை பகிரங்கப்பட்டுள்ளது! அந்த மனக்குடைச்சல் அவருக்கு ஒருபுறம், மறுபுறம் தோல்வி அச்சம் உலுக்குவதால், இப்படி ஒரு ‘தியான வித்தை’மூலம் நாடு தழுவிய ஏழாம் கட்ட வாக்காளர்களிடையே மறைமுகமாக வாக்குச் சேகரிக்க வழி   கண்டுபிடிப்பு   தான் இது.

தேர்தல் ஆணையம் வேடிக்கை :

தேர்தல் சட்டப்படி, சைகைகள் (Visual representation) மூலம் செய்யும் பிரச்சாரத்தை காலக்கெடுவுக்குப்   பின்னர்   செய்வது   சட்ட விரோதம் ஆகும்.  இதைத் தேர்தல் ஆணையம் ஏன் வேடிக்கை பார்த்து, இந்த வித்தைக்குத் துணை போகிறது என்பது புரியவில்லை..?

கிராமத்தில்   ஒரு பழமொழி உண்டு.   “பந்தியில் பரிமாறுகிறவர் நம்மாளாய் இருந்தால், எந்தப் பந்தியில் உட்கார்ந்தாலும் (அது கடைசி பந்தியாக இருந்தாலும்கூட) என்ன? பரிமாறுகிறவர், நம்மைப் பார்த்துக் கொள்வார் அல்லவா!”

அதுதான் இப்போது (தேர்தல் ஆணையம்) நமக்கு நினைவுக்கு வருகிறது! மற்றொரு கேள்வியும் நியாயமாகக் கேட்கப்பட வேண்டும். ‘கடவுள் அவதாரங்கள்’ எப்போதாவது ‘தியானம்’ செய்து, தியானத்தின் முன்போ, பின்போ சங்கீதத்திற்கு தாளம் போடுவதுபோல், பக்தி வேஷமும் போட்டு ஆடியதாக, தலையாட்டியதாக எந்தப் புராணத்திலும் இதுவரை காணவில்லையே..!

இதுவரை மக்களை படாதபாடு படுத்திய பிரதமர் மோடி, தனது வித்தைகளால், கடவுள்களையும் (அப்படி யாரேனும் இருந்தால்) படாதபாடு படுத்தவும் முனைந்துவிட்டார்..! பக்திப்   போதை   எந்த   அளவுக்கு அரசியலில் ஆயுதமாக்கப்படுகிறது பார்த்தீர்களா..? வெட்கம்..! மகாவெட்கம்..!” எனத் தெரிவித்துள்ளார்.

– லோகேஸ்வரி.வெ

Tags: #LOKSABA ELECTION 2024#நாடாளுமன்ற தேர்தல் 2024#லோக்சபா தேர்தல்இந்தியப் பிரதமர் மோடிகன்னியாகுமரி  மாவட்டம்கி.வீரமணிபிரதமர் மோடி தியானம்விவேகானந்தர் தியான மண்டம்
ADVERTISEMENT

Related Posts

Indian jets were shot down
அரசியல்

இந்திய விமானங்களை பாகிஸ்தான் சுட்டுவீழ்த்தியதா? – ஜெனரல் அனில் சௌஹான் பேட்டி!

அரசியல்

‘இந்தியாவுக்கு பாடம் கற்று கொடுக்க நினைத்தோம்… பிரம்மோஸ் வந்து விழுந்துட்டு!’ – பாக் பிரதமர் கதறல்

அரசியல்

உயிரே போனாலும் கன்னடம் வாழ்க என்று சொல்ல மறுத்தவர் ஜெயலலிதா- நயினார் நாகேந்திரன் சொன்ன பிளாஸ்பேக்

Next Post

சூர்யாவுக்கு வயிற்றெரிச்சலை கொடுக்கும் வணங்கான்..!! பாலா நச் பதில்..!

  • Trending
  • Comments
  • Latest

விலையும்  கம்மியா இருக்கு..? மொபைலும்   பெஸ்டா இருக்கே..!!  என ஆச்சரிய பட வைக்கும் விவோ..!!   

கணவனாக இருந்தாலும் அத்துமீறினால் பாலியல் வன்கொடுமை தான் – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!

வங்க கடலில் புதிய புயல் : தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்….!!

சந்திரகிரகணம் முடிந்தவுடன் செய்ய வேண்டிய பரிகாரங்கள்..?

எவ்வளவு நேரம் பூஜை அறையில் விளக்கு ஏறியலாம்..

நெற்றியில் போட்டு வைத்து கொள்வதன் காரணம் என்ன …??

வாழைப்பழத்தின் ஆரோக்கிய பலன்கள்…

தமிழகம் முழுவதும் இன்று புதிய கவுன்சிலர்கள் பதவியேற்பு…!!

Heavy rain in 13 districts of Tamilnadu

13 மாவட்டங்களில் இன்று கனமழை… சென்னை வானிலை ஆய்வு மையம்!

விமானவிபத்தில் 133 பேர் உயிரிழப்பு… விபத்துக்கு காரணம் என்ன?

ஊர்வசி மகள் சினிமாவில் அறிமுகம் ; தந்தை சொன்ன உருக்கமான தகவல்கள்!

வாசிம் அக்ரம் ஏன் அழுதபடி இருக்கிறார்? – சிலையால் ஒரே சிரிப்பு

Trending News

Heavy rain in 13 districts of Tamilnadu

13 மாவட்டங்களில் இன்று கனமழை… சென்னை வானிலை ஆய்வு மையம்!

விமானவிபத்தில் 133 பேர் உயிரிழப்பு… விபத்துக்கு காரணம் என்ன?

ஊர்வசி மகள் சினிமாவில் அறிமுகம் ; தந்தை சொன்ன உருக்கமான தகவல்கள்!

வாசிம் அக்ரம் ஏன் அழுதபடி இருக்கிறார்? – சிலையால் ஒரே சிரிப்பு

ADVERTISEMENT

About Madhimugam Tholaikkatchi

MadhimugamTV is owned by the RMT NETWORK PRIVATE LMITED PRIVATED established July14th 2016. Madhimugam TV is a Free to Air (FTA) channel available on all major Cable/MSO Networks in Tamil Nadu and on all major MSO Networks across India and worldwide.

Follow Us

Policies

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

Quick Links

  • உலகம்
  • இந்தியா
  • தமிழ்நாடு
  • அரசியல்

Contact Us

RMT Network Private Limited
Real Tower, 4th Floor,
No.52 Royapettah High Road,
Mylapore, Chennai – 600 004.
Email: info@madhimguam.com

For Advertising Contact
Ph : 91+9884060451
Email: vigneshd@madhimugam.com

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.

  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.