“”தீபாவளிக்கு இவ்ளோ சிறப்பா!!!””
தீபாவளியை பல நாடுகளில் கொண்டாடுகின்றார்கள்.இரவு நேரங்களில் விளக்கு ஏற்றி வழிபடுவார்கள்.
இந்தியாவில் கொண்டாடப்படும் பண்டிகைகளில் மிகவும் முக்கியமானது தீபாவளி பண்டிகை ஆகும்.
தீபம் ஏற்றி வழிபடுவதை அடிப்படையாகக் கொண்ட இந்த திருநாளை, இந்தியா மட்டுமின்றி , பல நாடுகளும் கொண்டாடுகின்றது.ஆனால் பெயர்தான் வேறு வேறாக உள்ளது. அவற்றைப் பார்ப்போம்.
-
இந்தியர்கள் அதிகமாக இருக்கும் நாடான, பீஜி தீவில் தீபாவளி பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்படுகிறது.பட்டாசுகள் வெடித்தும், வீடுகளை அலங்கரித்தும், நண்பர்களுக்கு பரிசுப்பொருட்களை வழங்கியும் இங்கே தீபாவளியை சிறப்பிக்கிறார்கள்.
-
மலேசியாவில் ‘ஹரி தீபாவளி’ என்று இந்தியாவில் கொண்டாடுவதை போன்றே தீபாவளியை கொண்டாடுகிறார்கள். காலையில் எழுந்து உடல் முழுவதும் எண்ணெய் தேய்த்து குளித்துவிட்டு அந்த நாள் தொடங்குகிறது. கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் செய்கிறார்கள். ஆனால் இங்கே வெடி வெடிக்க அனுமதி கிடையாது. அனைவரும் இனிப்புகளை பரிமாறிக்கொண்டு தங்களின் தீபாவளி வாழ்த்துக்களை தெரிவிக்கிறார்கள்.
-
மொரீசியஸ் நாட்டில் 50 சதவீதம் பேர் இந்துக்கள் வாழ்கிறார்கள். எனவே மொரீசியஸில் தீபாவளி பண்டிகை உற்சாகத்துடன் மக்களிடையே கொண்டாடப்படுகிறது.
-
இந்தோனேசியாவில் தீபாவளி இரவு நேரத்தில் தீபம் ஏற்றி வழிபடுகிறார்கள். வெடிகள், வாண வேடிக்கைகளும் எனக் கொண்டாடி மகிழ்கிறார்கள்.
-
இந்துக்கள் அதிகமாக வசிக்கும் நாடுகளில் முதன்மையானது நேபாளம். இங்கு தீபாவளி, உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. நேபாளத்தில் ‘தசைன்’ என்ற பண்டிகைக்கு அடுத்ததாக பெரிதும் கொண்டாடப்படும் பண்டிகை தீபாவளி. அன்று லட்சுமி பூஜையும் செய்கிறார்கள்.
-
இலங்கையில் தீபாவளியை முன்னிட்டே பிரத்தியேக இனிப்பு வகைகள் அறிமுகப்படுத்தப்படும் என்பதை கொண்டே அங்கு தீபாவளிக்கு முக்கியத்துவம் தருகிறார்கள் என்பதை தெரிந்து கொள்ளலாம்.
-
கனடாவில் அதிக அளவில் பஞ்சாப் மக்கள் வாழ்வதினால், இங்கு 3-வது அதிகாரப்பூர்வமான மொழியாக பஞ்சாபி உள்ளது. ஆதலால் இங்கு தீபாவளி ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடப்படுகிறது.
-
சிங்கப்பூரின் “லிட்டில் இந்தியா” என்ற பகுதியில் ஒரு மாதத்திற்கு முன்பிருந்தே தீபாவளி கொண்டாட்டங்கள் தொடங்குகிறது, அப்பகுதி வண்ண விளக்குகளால் பிரகாசிக்கிறது.
-
தசராவும், அதற்கு அடுத்து வரும் தீபாவளியும் அதிக மக்களால் கொண்டாடப்படும் விழாவாகும். இந்த நாட்டில் இந்தியாவைப் போன்றே தீபாவளிக்காகவே கடைகள் உருவாகுவதும் வழக்கமான ஒன்று.