மறக்கவும் மாட்டோம் மன்னிக்கவும் மாட்டோம்..!! சின்ன பின்னம் ஆன காசா..!! இஸ்ரேல் எடுத்த அதிரடி முடிவு..?
காசா மீது தாக்குதலை இஸ்ரேல் மேற்கொண்டு வரும் நிலையில் எதிர்கள் செய்யும் எந்த வித சதியையும் நாங்க மறக்கவும் மாட்டோம், மன்னிக்கவும் மாட்டோம் என இஸ்ரேல் அறிவித்துள்ளது..
ஆக்கிரமிப்புக்கு உள்ளாக்கப்பட்டு இருக்கும் பாலஸ்தீனத்தை மீட்டெடுக்க வேண்டும் என பலரும் குரல் கொடுத்து வருகின்றனர்.. பாலஸ்தீனத்தின் விடுதலை இயக்கங்கள் உருவாகி அதன் ஆயுதம் தாங்கிய போராட்டத்தை முன்னெடுத்து வந்த நிலையில் இஸ்ரேலும் மேற்கு நாடுகளும் அவர்களை தீவிரவாதிகள் என முத்திரை பதித்து தாக்குதலை நடத்தி வருகிறது..
அவர்களை பழிவாங்கும் எண்ணத்தில் தான் கடந்த 7ம் தேதியன்று பாலஸ்தீன விடுதலை அமைப்பு ஹமாஸ் இஸ்ரேல் மீது கடுமையான தாக்குதலை நடத்தியது.. ஒரே நேரத்தில் 5000க்கும் அதிகமான ஏவுகணைகள் அனுப்பியதால் இஸ்ரேலின் சில பகுதிகளை பலத்த சேதம் அடைந்துள்ளன இதனால் கோபம் அடைந்த இஸ்ரேல் அதன் தாக்குதலை அதிகரித்தது.. இந்த தாக்குதல் இன்று வரை அதிகரித்து வரும் நிலையில் உயர் இழப்பு 1500 தாண்டியுள்ளது..
இதை முடிவிற்கு கொண்டு வர இஸ்லாமிய நாடுகள் முயன்றுள்ளனர்.., அமெரிக்கா நாடு.., தனது போர் கப்பலை காசாவிற்கு அருகே நிலை நிறுத்தியுள்ளது.. மத்திய கிழக்கு பகுதியில் நிறுத்தி காசா பகுதி தடம் தெரியாமல் அழிக்கப்படும் என கூறியுள்ளது..
ஏற்னெவே இஸ்ரேலின் தாக்குதலில் பாலஸ்தீன மக்கள் 1500க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ள நிலையில், 12 ஐநா ஊழியர்களும் உயிரிழந்துள்ளனர். காசாவில் தண்ணீர், மின்சாரம் என அனைத்து அடிப்படை வசதிகளும் துண்டிக்கப்பட்டுள்ளன.., மேலும் இவை போர் மீறல் என்றும் பல உலக நாடுகள் குற்றம் சாற்றுகின்றனர்..