ஹமாஸ் படை நடத்திய தாக்குதலே இந்த போருக்கு காரணம் என காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
The Israel-Gaza war threatens to escalate and cause more deaths on both sides
It cannot be denied that the terrorist attack by Hamas was the cause of this war. Hamas has earned the world's condemnation
The massive retaliation by Israel against Gaza has intensified the violence…
— P. Chidambaram (@PChidambaram_IN) October 12, 2023
இது குறித்து அவா் ‘எக்ஸ்’ (twitter) சமூக வலைதளத்தில் நேற்று வெளியிட்ட பதிவில், ‘இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய பயங்கரவாதத் தாக்குதலே இந்தப் போருக்குக் காரணம் என்பதை மறுக்க முடியாது. காஸா பகுதியில் இஸ்ரேல் நடத்திய பதிலடி தாக்குதல் இந்த மோதலைத் தீவிரப்படுத்தியுள்ளது.
பெண்கள், குழந்தைகள் உள்பட நூற்றுக்கணக்கான அப்பாவி மக்களும் இந்தத் தாக்குதலில் உயிரிழந்தனா்.இஸ்ரேல்-காஸா இடையே பல ஆண்டுகளாக நீடிக்கும் பகைக்கு இந்த மோதல் உறுதியாகத் தீா்வு தரப்போவதில்லை. மோதலை நிறுத்துவதே உடனடியாகச் செய்ய வேண்டிய பணி.
இதன் அடிப்படையிலேயே மோதலை நிறுத்துமாறு காங்கிரஸ் சாா்பில் அறிக்கை வெளியிடப்பட்டு தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. மத்திய கிழக்கில் தொடரும் மோதலை முடிவுக்கு கொண்டுவர உலக நாடுகள் ஒன்றிணைந்து வாய்ப்புள்ள அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும்’ எனக் குறிப்பிட்டுள்ளாா்.