பிரதமர் மோடி காலில் விழுந்த வானதி சீனிவாசன்..!! சட்டென மோடி சொன்ன சொல்..!!
மகளிர் இட ஒதுக்கீடு மசோதா வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்ட நிலையில் பாஜக மகளிர் அணி சார்பில் டெல்லியில் உள்ள பாஜக அலுவகத்தில் பிரதமர் மோடிக்கு பாராட்டு விழா இன்று நடைபெற்றது.
கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ.வும், பாஜக தேசிய மகளிர் அணி தலைவியுமான வானதி சீனிவாசன் பிரதமர் மோடியின் காலில் விழுந்தார். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த பிரதமர் மோடி, “இப்படி எல்லாம் காலில் விழக்கூடாது” என கூறியுள்ளார்..
மேலும் இந்நிகழ்ச்சியில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், பாஜக மகளிர் அணி தலைவர்கள், தொண்டர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இது அண்மையில் நம் மதிமுகமிற்கு கிடைத்த செய்தி மேலும் இதுபோன்ற பல அண்மை செய்திகளை பார்க்க மற்றும் படிக்க மதிமுகமில் இணைந்திடுங்கள்..