பிறந்தநாளை முன்னிட்டு, கட்சி நிா்வாகிகளையும் தொண்டா்களையும் சந்தித்தார். தொண்டர்களைப் பார்த்து உற்சாகமாகக் கையசைத்த விஜயகாந்த்தைப் பார்த்து, கட்சியினர் ஆரவாரம் செய்தனர். நிர்வாகிகளைப் பார்த்து கும்பிட்ட விஜயகாந்த், நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுடன் குழுவாகப் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.
விஜயகாந்த் தனது 71-ஆவது பிறந்த நாளை இன்று கொண்டாடி வருகிறார். அதையொட்டி, கோயம்பேட்டில் உள்ள கட்சி அலுவலகத்துக்கு வெள்ளிக்கிழமை காலை 10.30 மணியளவில் வருகை தந்தார். அங்கு கட்சி நிா்வாகிகளையும் தொண்டா்களையும் சந்தித்து மகிழ்ந்தார். மேலும், விஜயகாந்த் சார்பில் அவரது பிறந்தநாளை முன்னிட்டு, ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. நலமுடன் உள்ளேன் முன்னதாக, இந்த நிகழ்வு தொடா்பாக விஜயகாந்த் வெளியிட்டிருந்த அறிக்கையில், என்னுடைய உடல்நலன் தொடா்பாக வரும் செய்திகளை யாரும் நம்ப வேண்டாம். நான் நலமுடன் உள்ளேன் என்று குறிப்பிட்டிருந்தார்.