மதுரையில் அதிமுக நடத்திய மாநாடு பிரமாண்டமான மாநாடு என்பது ஏற்கத்தக்க தல்ல என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.
கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் இன்று காலை அவர் கூறியதாவது:
“அரசியல் கட்சிகள் தங்கள் பலத்தை காட்டுவதற்காக பல்வேறு முயற்சிகளையும் மேற்கொள்வர். இதில் அதிமுக நடத்திய மாநாடு பிரமாண்டம் என எதுவும் கிடையாது. என் மண் என் மக்கள் நடை பயணத்திலும் ஆயிரக்கணக்கான மக்கள் திரள்கின்றனர். ஆனால் பிரமாண்டம் என்ற வார்த்தையை நான் பயன்படுத்த மாட்டேன்.