விளாத்திக்குளத்தில் பாஜக தலைவர் அண்ணாமலையை வரவேற்க சங்கிகளின் சங்கமம் என பாஜகவினரே போஸ்டர் வைத்து சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை ‘என் மண் என் மக்கள்’ என்ற தலைப்பில் நடைபயணம் மேற்கொண்டுள்ளளார். அவர் நேற்றைய நடைபயணத்தை தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகே கமலாபுரம் பஞ்சாயத்து, சுப்பிரமணியபுரத்தில் இருந்து துவங்கினார்.
இதையொட்டி விளாத்திகுளம் பஸ் நிலையம் முன் பாஜவினர் சார்பில் பேனர் வைக்கப்பட்டிருந்தது. அதில் ‘சங்கிகளின் சங்கமம்’ என குறிப்பிடப்பட்டிருந்தது. ஏற்கனவே எதிர்க்கட்சியினர் பாஜவினரை சங்கிகள் என்று விமர்சித்து வரும் நிலையில் சங்கிகளின் சங்கமம் என்று கட்சியினரே பேனர் வைத்தது பரபரப்பை ஏற்படுத்தியது.