புதுக்கோட்டை டிவிஎஸ் அருகே ஜேசிபி மூலம் கடைகளை அகற்றிய அதிகாரிகள்..!! வேதனையில் வியாபாரிகள்..!!
புதுக்கோட்டை மாவட்டம் டி.வி.எஸ் அருகே நகராட்சி மற்றும் நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான இடத்தினை ஆக்கிரமிப்பு செய்து மீன் விற்பனை செய்யும் கடைகளை அதிரடியாக அகற்றிய அதிகாரிகள், ஆக்கிரமிப்பை அகற்ற வந்த அதிகாரிகள் மற்றும் காவல் துறையுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட மீன் வியாபாரிகள்
புதுக்கோட்டை நகராட்சிக்கு உட்பட்ட 42 வார்டு களிலும், பல்வேறு இடங்களில் நகராட்சி நிர்வாகத்திடம் அனுமதி பெறாமல் சாலை ஓரங்களில் மற்றும் அதை சுற்றியுள்ள பல்வேறு இடங்களிலும் மீன் கடைகள் அதிக அளவில் போடப்பட்டு வருகிறது.
இதே போல் புதுக்கோட்டை டி.வி.எஸ் அருகே நகராட்சி மற்றும் நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான இடங்களில், பத்து வருடங்களுக்கும் மேலாக 12க்கும் மேற்பட்ட மீன் கடைகள் அனுமதி இல்லாமல் செயல்பட்டு வருகிறது. ஏற்கனவே அதிமுக ஆட்சிக் காலத்தில், டிவிஎஸ் அருகே 55 லட்சம் மதிப்பில் 20க்கும் மேற்பட்ட கடைகள் நகராட்சி மூலம் கட்டப்பட்டு திறக்கப்படாமல் இருந்துள்ளது.
இந்நிலையில் திமுக ஆட்சியில் மாற்றம் ஏற்பட்ட பிறகு, மீன் கடைகள் திறக்கப் பட்டு தற்போது செயல்பட்டு வந்த நிலையில், தற்போது டி.வி.எஸ் அருகே அனுமதி இல்லாமல் செயல்பட்டு வரும் மீன் கடைகளால், புதுகோட்டை நகராட்சியில் உள்ள மீன் மார்க்கெட்டில் வியாபாரம் பாதிக்கப் பட்டுள்ளது. என மீன் விற்பனையாளர்கள் மாநகராட்சி அதிகாரியிகளிடம் கோரிக்கை தெரிவித்துள்ளனர்.
இதன் அடிப்படையில் இன்று மாநகராட்சி மற்றும் நெடுஞ்சாலை துறையினர் ஒன்று சேர்ந்து புதுக்கோட்டை டிவிஎஸ் அருகே அனுமதி இல்லாமல் செயல்பட்டு வந்த 12க்கும் மேற்பட்ட கடைகளை நகராட்சி ஊழியர்கள் மூலம் அதிரடியாக அகற்றியுள்ளனர்.
மேலும் நகராட்சி அனுமதி இல்லாமல் வைக்கப்பட்டிருந்த கடைகளை ஜேசிபி இயந்திரம் கொண்டு அகற்றும் பணியில் ஈடுபட்டனர். அனுமதி இல்லாமல் மீன் கடை வைத்திருந்தவர்கள் நகராட்சி அதிகாரிகள் மற்றும் காவல் துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபடுள்ளனர்.
இதனால் புதுகோட்டை டி.வி.எஸ் பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது. மேலும் முன் அறிவிப்பின்றி கடைகளை அகற்றியதால் வியாபாரிகள் என்ன செய்வது என்று தெரியமால் நிலைகுலைந்துள்ளனர்.
Discussion about this post