90’ஸ் களின் கனவு கன்னி மீனாவின் ஆட்டோகிராப் பக்கம்..!!
சென்னையில் நடிகை மீனாவின் பிறந்த நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. இவர் குழந்தை பருவத்தில் இருந்தே திரை உலகில் நடிக்க தொடங்கி விட்டார். இவர் தமிழ் மட்டுமின்றி மலையாளம் ,கன்னடம் ,தெலுங்கு போன்ற படங்களிலும் நடித்து வருகிறார்.
கடந்த ஆண்டு ஜூன் மாதம் மீனாவின் கணவர் இறந்த நிலையில் , இவர் தன மகளான நைனிகாவுடன் தனியாக வாழ்ந்து வருகிறார்.
தற்போது அவர் பிறந்தநாளான இன்று அவர்களின் ரசிகர்களும் , திரை பிரபலங்களும் அவருக்கு பிறந்த நாள் வாழ்த்துகளை பகிர்ந்து கொண்டு இருக்கின்றனர்.
நடிகை மீனா இந்த ஆண்டு பிறந்த நாளை புதிதாக வரவிருக்கும் படத்தின் குழுவினருடன் கேரளாவில் கொண்டாட போவதாக தகவல் வந்துள்ளது.
இவர் 1976 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 16 ஆம் தேதி அன்று சென்னையில் பிறந்தார். தற்போது அவருக்கு 47 ஆவது பிறந்த நாள்.
முதன் முதலில் 1982 ஆம் ஆண்டு சிவாஜியின் “நெஞ்சங்கள்” என்னும் திரை படத்தில் மீனா அறிமுகம் ஆனார் . அதன் பின் ரஜினி நடித்த “எங்கேயோ கேட்ட குரல்“ என்னும் படத்தில் நடித்தார்.
அதன் பிறகு பார்வையின் மறுபக்கம், தீர்ப்புகள் திருத்த படலாம், சுமங்கலி , திருப்பம், தண்டிக்க பட்ட நியாயங்கள் , அன்புள்ள ரஜினிகாந்த், உயிரே உனக்காக, லட்சுமி வந்தாச்சு போன்ற தமிழ் படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார்.
இது மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி படங்களிலும் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார்.
1990 ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான நவயுகம் என்னும் படத்தில் முதன் முதலாக கதாநாயகியாக நடிக்க தொடங்கினார் .
தமிழ் சினிமாவில் ஒரு புதிய கதை என்னும் படத்தின் மூலம் கதாநாயகியாக தமிழ் மக்களுக்கு அறிமுகமானார். ஆனால் அவரை பிரபலமாக்கிய படம் “என் ராசாவின் மனசிலே” எனும் படத்தில் ராஜ்கிரணுக்கு ஜோடியாக நடித்துள்ளார் .
தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாருடன் குழந்தை நட்சத்திரமாய் நடித்த இவர் 1993 ஆம் ஆண்டு “எஜமான்” படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் கதாநாயகியாக நடித்து தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக கொடிக்கட்டி பறக்க தொடங்கினார்..
குழந்தை நட்சத்திரமாய் ரஜினியுடன் மீனா ஜோடியாக நடித்த போது அந்த நேரத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ஆனாலும் மீனா ரஜினியுடன் தொடர்ந்து முத்து , வீர போன்ற படங்களில் ரஜினியுடன் நடித்து வந்தார்.
அதன் பிறகு அஜித் , மோகன்லால் , கமல் என மிக பிரபலமான நடிகர்களுடன் நடித்து வந்தார்.
இரு வருடங்களுக்கு முன்பு வெளிவந்த அண்ணாத்த திரை படத்தில் ரஜினிக்கு அத்தை பெண்ணாக நடித்துள்ளார் .
தமிழ் சினிமாவில் நடித்ததை போலவே மலையாளத்திலும் மோகன்லாலுடன் இணைந்து த்ரிஷம் சீரிஸ் என்னும் படத்தில் நடித்திருந்தார். தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் மலையாளத்தில் ஆனந்தபுரம் டைரிஸ் என்னும் ஒரு புது படத்தில் நடிப்பதாகவும் போஸ்ட்டுகளை வெளியிட்டுள்ளார்.
அந்த படக்குழுவினருடன் இணைந்து தான் இந்த வருட பிறந்த நாளை கொண்டாட போவதாக தகவல் வெளியாகியுள்ளது .
சென்னையில் நடிகை மீனாவின் பிறந்த நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. இவர் குழந்தை பருவத்தில் இருந்தே திரை உலகில் நடிக்க தொடங்கி விட்டார் . இவர் தமிழ் மட்டுமின்றி மலையாளம் ,கன்னடம் ,தெலுங்கு போன்ற படங்களிலும் நடித்து வருகிறார்.
கடந்த ஆண்டு ஜூன் மாதம் மீனாவின் கணவர் இறந்த நிலையில் , இவர் தன மகளான நைனிகாவுடன் தனியாக வாழ்ந்து வருகிறார். தற்போது அவர் பிறந்தநாளான இன்று அவர்களின் ரசிகர்களும் , திரை பிரபலங்களும் அவருக்கு பிறந்த நாள் வாழ்த்துகளை பகிர்ந்து கொண்டு இருக்கின்றனர்.
நடிகை மீனா இந்த ஆண்டு பிறந்த நாளை புதிதாக வரவிருக்கும் படத்தின் குழுவினருடன் கேரளாவில் கொண்டாட போவதாக தகவல் வந்துள்ளது.
இவர் 1976 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 16 ஆம் தேதி அன்று சென்னையில் பிறந்தார். தற்போது அவருக்கு 47 ஆவது பிறந்த நாள்.
என்ன தான் நடிகை மீனா கதாநாயகியாக வளம் வந்தாலும்.., 90’ஸ் கிட்ஸ் மனதில் என்றும் கனவு கன்னியாக தான் இருக்கிறார்.., ஆன்மீக படமான பாளையத்து அம்மன் படம் தான் இன்று வரை இவரை ரசிகர்கள் மனதில் கதாநாயகியாக இடம் பெற வைத்துள்ளது.
-ரோகினி.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..