மாடு முட்டி 9 வயது சிறுமி காயம்..!! அரும்பாக்கத்தில் நடந்த கொடூரம்..!!
சென்னை அரும்பாக்கத்தில் எம்.எம்.டி.ஏ காலனியில் 9 வயது சிறுமி பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்து கொண்டிருந்த போது பசு மாடு கொடூரமாக தாக்கியுள்ளது. சிசிடிவியில் பதிவிடப் பட்ட இந்த காட்சி தற்போது இணையத்தில் பரவி அனைவரின் நெஞ்சையும் பதைபதைக்க வைத்துள்ளது.
சூளைமேட்டை சேர்ந்த ஹர்ஷின் பானு இவர் தனது 9 வயது மகள் ஆயிஷா மற்றும் 5 வயது பெண் குழந்தையுடன் ஆர்.பிளாக் இளங்கோ தெருவில் நடந்து வந்து கொண்டிருந்தார், அப்பொழுது அவர்களுக்கு எதிரே வந்த இரண்டு பசுக்கள்.., எதிர்பாராத நேரத்தில் திடீரென சிறுமி ஆயிஷாவை கொம்பால் குத்தி கீழே வீழ்த்தியுள்ளது.
சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு அங்கு வந்த பொது மக்கள் மாட்டை விரட்டியுள்ளனர்.., ஆனால் எதற்கும் அசராத மாடு சிறுமியை கீழே குத்தி வீழ்த்தியுள்ளது. நீண்ட போராட்டத்திற்கு பின் மாட்டிடம் இருந்து சிறுமியை மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
சிறுமியின் குடல் கிழிக்க பட்டதால் அதிக ரத்த போக்கு ஏற்பட்டுள்ளது. பின் சிறுமிக்கு அதிக தையல்கள் போடப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் குறித்து சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன், மாடு மற்றும் மாட்டின் உரிமையாளரை பெரம்பூரில் உள்ள கால்நடை அலுவலகத்தில் வைத்துள்ளோம் என தெரிவித்துள்ளார். மேலும் குழந்தையின் உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் வகையில் மாட்டை அசாதாரணமாக விட்டதால் இந்த செயல் நடந்துள்ளது.
எனவே மாட்டின் உரிமையாளர் மீது கவன குறைவு செயல்பாடு உயிருக்கு ஆபத்து விளைவித்தல், மற்றும் செல்ல பிராணி வளர்ப்பில் மனித உயிருக்கு ஆபத்து என இரு பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளோம்.., இனி பின் வரும் காலங்களில் இதுபோன்ற தவறுகள் நடக்காது என ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
Discussion about this post